Thursday, December 1, 2022
Homeசினிமாசும்மாவா சொன்னாங்க ULTIMATE ⭐️ னு கேக்குடன் ஷாலினி அஜித் பிறந்தநாள் புதிய ...

சும்மாவா சொன்னாங்க ULTIMATE ⭐️ னு கேக்குடன் ஷாலினி அஜித் பிறந்தநாள் புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் !!

Date:

Related stories

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது

நாயகனாக வடிவேலுவின் வெள்ளித்திரைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாயகி சேகர் ரிட்டர்ன்ஸ், டிசம்பர்...

கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அஜித்தின் துணிவு !!அஜித்தின் கோட்டையான மலேசியா !!லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு...

திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் கடத்தல் கூடமாக மாறுகிறது: இபிஎஸ்

திமுக ஆட்சியில் மாநிலம் போதைப்பொருள் கடத்தலின் கூடாரமாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும்,...

தமிழக அரசு மருத்துவமனைகளில் சி-பிரிவு பிரசவங்கள் 5% குறைக்கப்பட்டுள்ளன

அரசு மருத்துவமனைகளில் ஒரு வருடத்தில் சிசேரியன் பிரசவம் (சி-பிரிவு) எண்ணிக்கை 5...

சியான் விக்ரம் மற்றும் ஆர். மாதவன் இணைந்து நடிக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்

சியான் விக்ரம் மற்றும் ஆர். மாதவன் இருவரும் மிகவும் திறமையான நட்சத்திர...
spot_imgspot_img

எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்று அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் காத்திருக்கிறது. வதந்திகளின்படி, துனிவு 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகள் நம்பப்படுமானால், துனிவு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் வரிசுவுடன் மோதும். அஜீத், விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதி பல வருடங்கள் ஆகிவிட்டது.

அஜித்தின் துணிவு பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் நேருக்கு நேர் மோதவுள்ளார் அஜித். விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாவதால், அஜித் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். அஜித் – ஹெச் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் தத்துவம் அவரது ரசிகர்களிடம் வைரலாகி வந்த நிலையில், துணிவு இசையமைப்பாளர் ஜிப்ரானும் ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். ஏற்கனவே துணிவு படத்தின் மூன்று பாடல்களும் ரெடியாகிவிட்ட நிலையில், அடுத்து பின்னணி இசைக்கான வேலை வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அதீத சிந்தனையோடு வேலை செய்து கொண்டிருக்கும் ஜிப்ரான், அந்த போட்டோவை தனது ட்வீட்டரில் ‘Working’ என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்துள்ளார். இதனால், துணிவு படத்திற்கான பிஜிஎம் வேலைகள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு படத்தில் அஜித்தின் கெத்து சாங், ஒரு குத்து சாங் என இந்த இரண்டு பாடல்கள் போக, மேலும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். அது, ‘காசேதான் கடவுளடா’ என்ற டைட்டிலில் ராப் சாங்காக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்து ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளதால், பிஜிஎம் மங்காத்தா பட பாணியில் செம்ம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஜிப்ரானும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், வாரிசு தியேட்டர் ரைட்ஸையும் வாங்கியுள்ளதால், ப்ரோமோஷன்கள் வேறலெவலில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அஜித்தின் துணிவுக்குப் போட்டியாக விஜய்யின் வாரிசு படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளது, பொங்கல் ரேஸில் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பார்ட்டியை அஜித் விமர்சையாக கொண்டாடியுள்ளார். இந்த பார்ட்டியில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.பிறந்தநாள் பார்ட்டியில் அஜித் – ஷாலினி ஜோடி இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

துணிவு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எச் வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணையும் படம். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories