Saturday, April 13, 2024 5:55 pm

அஜித் திரைப்படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தை தான் செய்வேன் !! லோகேஷ் கனகராஜ் ஒரே போடு

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி இன்று அக்டோபர் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் காத்திருக்கிறது. வதந்திகளின்படி, துனிவு 2023 பொங்கல் அன்று திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகள் நம்பப்படுமானால், துனிவு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்யின் வரிசுவுடன் மோதும். அஜீத், விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதி பல வருடங்கள் ஆகிவிட்டது.

இதைத் தொடர்ந்து துணிவு படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படி உள்ளூரில் நீங்க பார்த்துக்கோங்க வெளியூரில் நாங்க பார்த்துக்கிறோம் என்று துணிவு படத்திற்காக லைக்கா களம் இறங்கி இருப்பது அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மேலும் அஜித்தின் 62-வது படத்தையும் லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அஜித்தின் 61-வது படமான துணிவு திரைப்படத்தையும் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கான உரிமையை லைக்கா பெற்றிருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி துணிவு படத்திற்கு போட்டியாக தளபதி விஜயின் வாரிசு படமும் வெளியாக்குவதால், இந்த இரண்டு படத்திற்கான பட ப்ரொமோஷன்கள் இனி வரும் நாட்களில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளனர். அதிலும் வெளிநாட்டில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை பெற்ற லைக்கா கொஞ்சம் அதிகமாகவே ப்ரோமோஷன் செய்ய பார்க்க உள்ளனர்.

அத்துடன் எட்டு வருடங்களுக்கு பின்பு தல, தளபதி இருவருடைய படமும் மீண்டும் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதால் கோலிவுட் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த பொங்கல் பண்டிகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களின் வியாபாரமும் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் துணிவு, வாரிசு இரண்டு படங்களில் எந்த படம் வசூலில் வெற்றி பெறும் என்பதை சோசியல் மீடியாவில் தல, தளபதி ரசிகர்கள் இப்போது இருந்தே அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

துணிவு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எச் வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணையும் படம். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கார்த்தி,விஜய், கமலுடன் இணைந்த லோகேஷ் அஜித்துடன் எப்போது இணைவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆனால் அதற்கான எந்த மூவ்மெண்ட்டும் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. அதேசமயம், அஜித்துடன் பணியாற்ற லோகேஷுக்கு விருப்பம் இருக்கவே செய்கிறது. அதை அவரே சில பேட்டிகளில் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் அஜித்துடன் இணைந்தால் எப்படிப்பட்ட படம் செய்வீர்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “அஜித்துடன் இணைய எனக்கும் ஆசைதான். அப்படி அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் தீனா போன்ற ஒரு படத்தை இயக்குவேன்” என்றார். அவரது இந்த பதில் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கிறது.ஏனெனில் அஜித்தின் கரியரில் தீனா படத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. 2001ஆம் ஆண்டு வெளியான தீனா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். முக்கியமாக அந்தப் படம் அஜித்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. எனவே லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைந்து தீனா ஜானரில் ஒரு படம் செய்து அதகளம் செய்ய வேண்டுமென ஏகே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஹெச்.வினோத்துடன் அஜித் தொடர்ந்து பணியாற்றிவரும் சூழலில் வினோத்தின் நெருங்கிய நண்பரான லோகேஷுடனும் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் அஜித் திரைப்படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் தீனா படத்தை தான் ரீமேக் செய்வேன் என்ற லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்


இந்த செய்தி தற்போது வைரலாகிவருகிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்