அஜித்தின் ‘துனிவு’ 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சந்திக்க பரபரப்பாக போஸ்ட் புரொடக்ஷன் நடந்து வருகிறது. இதற்கிடையில் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது குழுவினர் விரைவில் விளம்பர நடவடிக்கைகளை தொடங்க உள்ளனர், முதலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிங்கிள் ‘சில்லா சில்லா’ வெளியிடப்படும். இசையமைப்பாளர் ஜிப்ரானுக்காக அனிருத் பாடியுள்ளார்.
‘துணிவு’ படத்தின் நடனங்களை அமைத்த கல்யாண் மாஸ்டர், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘அனிருத் பாடிய ‘சில்லா சில்லா’ பாடலைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், இந்த பாடலை பார்வையாளர்கள் நிச்சயமாக ரசிப்பார்கள். அதை இயக்கும் போது தியேட்டர்கள் கண்டிப்பாக அதிரும். படத்தில் மூன்று பாடல்கள் இருக்கும், ஒரு குத்து பாடல், மற்றொன்று ஒரு கெத்து பாடல் மற்றும் மூன்றாவது படத்தின் ஒரு பகுதியாக இருக்காது என்று விளம்பர எண்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் வாரிசு பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாரிசு படத்தை தமிழைப் போல் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சங்கராந்தி பண்டிகைக்கு தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
வாரிசு நேரடி தெலுங்கு படம் இல்லை என்பதால் இப்படத்திற்கு அங்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 26-ந் தேதிக்கு தள்ளிவைத்துவிடலாமா என்கிற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு வாரிசு படம் வருமா வராதானு ஒருபக்கம் குழப்பம் நீடித்து வர, மறுபுறம் அஜித்தின் துணிவு படத்தின் வேலை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தற்போது தியேட்டர்களை புக் செய்யும் பணிகளை தொடங்கிவிட்டது. இதனால் அதிகளவிலான தியேட்டர்கள் துணிவு படத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
#Thunivu to release in MAXIMUM number of screens.#Varisu will have very less number of screens.
— Manobala Vijayabalan (@ManobalaV) November 16, 2022
சமீபத்தில் வெளியான தங்களுடைய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் லைகா நிறுவனம் சொந்தமாக வெளியிட்டது. அதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்து. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளதது.
Grande Muthuram Cinemas have signed #Thunivu for Pongal. 🔥#Ajithfans #Ajithfansclub #ajithfan #ajithkumarfc #ajithkumar #ThunivuinGrandemuthuramcinemas #Thala #ThalaAjith #actorajithkumarofficial #AK #AKfans #akfanpage #GrandeMuthuramCinemas #nellaicity #nellaiajithfans pic.twitter.com/Sk410toN69
— Grande Muthuram Cinemas (@GrandeCinemas) November 16, 2022
அஜித் நடிக்கும் 62 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் 61வது படமான துணிவையும் வெளிநாடுகளில் அந்த நிறுவனமே வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வியாபாரம் ஆகவில்லை என விஜய் ரசிகர்கள் செய்திகள் பரப்பி வந்தனர். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இந்நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் கூறிய பேட்டி தற்போது வைரலாகிவருகிறது
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், அமீர், பவானி மற்றும் பலர் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.