Wednesday, December 6, 2023 3:05 am

படப்பிடிப்பில் அஜித் கொடுத்த ஷாக்..!!! என்ன மனுஷன்யா இவரு !!ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்ற பிரபலம் ..!!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித் தயாராகி வரும் துணிவு படத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இருக்கும் நடிகர் படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் வெளிவந்த படத்தில், நடிகர் இன்னும் படத்தின் தோற்றத்தை விளையாடுவதைக் காணலாம். நேர்கொண்ட பார்வை (2019) மற்றும் வலிமை (2022) படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத்துடன் நடிகரை மீண்டும் இணைத்த படம்.

படத்தின் விவரங்கள் குறித்து படக்குழுவினர் மூடிமறைத்து வருவதால், துணிவு அப்டேட் ரசிகர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் வந்துள்ளது. படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர். இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படமும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிரீடம் படத்தின் போது அஜித் காயத்தால் அவதிப்பட்ட நிலையில் ஷூட்டிங்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அப்படத்தில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த நடிகர் திருமுருகன் கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான படம் ‘களவாணி’. வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் வில்லனாக நடித்தவர் திருமுருகன். இவர் தான் அப்படத்தின் இணை இயக்குநர் ஆவார். பலருக்கும் திருமுருகன் ஒரு உதவி இயக்குநர் என்பது தெரியாது. ஆனால் தனது வில்லத்தனமான நடிப்பால் மறக்க முடியாத நபராக மாறியுள்ள திருமுருகன் தனது சினிமா வாழ்க்கை குறித்தும், கிரீடம் படத்தில் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த நடிகர் திருமுருகன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

2002 காலக்கட்டத்துல இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.எல்.விஜய் அங்கிருந்து வெளியேறி படம் பண்ண வேண்டும் என வருகிறார். அப்போது தான் எங்கள் சந்திப்பு நடந்தது. நாங்க கிட்டதட்ட 100 விளம்பரங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளோம். களவாணி பட இயக்குநர் சற்குணமும் அதில் தான் வேலை செய்தார். அவரும் நானும் ஒரே ஊர். அதை தாண்டி இருவரும் தனித்தனியாக உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்தோம்.

நான் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோரிடம் வேலை செய்யலாம் என நினைத்தேன். ஆனால் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. உடனே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநாக இருந்த வெற்றிமாறன் உள்ளிட்டோர் எனக்கு நண்பர்களானார்கள். அப்போது வாலி படம் முடித்து விட்டு எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி ஒன்று என்னை மாற்றியது. உடனே நான் வேலையெல்லாம் விட்டுட்டு சினிமாவுக்குள் களமிறங்கி தான் ஏ.எல்.

சற்குணம் முதலில் களவாணி படம் பண்ற பிளான்லேயே இல்ல. அவர் ஒரு முன்னணி ஹீரோவை வச்சு ஆக்‌ஷன் படம் பண்ண நினைத்தார். உடனே கதையை கேட்ட நான் இந்த படம் எடுத்தா எல்லாரும் திரும்பி பார்க்குற டைரக்டரா இருக்க முடியுமா? என கேட்டேன் . இதனையடுத்து அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்தார். இது 2005ல் நடந்த சம்பவங்கள். அப்புறம் 5 ஆண்டுகள் கழித்து களவாணி படம் மூலம் தான் அவர் இயக்குநரானார்.

முதலில் களவாணி படத்துக்கு இருந்தது நெகட்டிவ் கிளைமேக்ஸ் தான் இருந்தது. நான் சும்மா கிண்டலுக்கு சொன்ன விஷயத்தை மற்றவர்களிடன் சொன்னபோது அவர்களுக்கு பிடிக்கவில்லை.

கிரீடம் படப்பிடிப்பு சமயத்தில் தமிழ்நாட்டில் அஜித்துக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் ஷூட்டிங்கை விசாகப்பட்டினத்திற்கு மாற்றினார்கள். ஆனாலும் அங்கு செம கூட்டம். அஜித்துக்கு கூட குறைவான ரசிகர்களே வந்தார்கள். ஆனால் த்ரிஷாவுக்கு வந்த கூட்டம் அதிகமானது. இதனை நாங்களே எதிர்பார்க்கவில்லை.

ஒரு காட்சியில் அஜித், த்ரிஷா இருவரும் பிள்ளையார் சிலை முன்பு சாமி கும்பிடுவது போன்று படமாக்கினோம். அப்போது இருவரும் ஓடி வந்தார்கள். என்னவென்று கேட்டால் பிள்ளையார் சிலை அருகில் நின்ற ஆலமரத்தில் ஒரு 500 பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதனால் சாக்குப்பவுடர் வாங்கி பேன் வைத்து முழுவதுமாக மக்களை மறைச்சிட்டு தான் ஷுட் பண்ணோம்.

ஒரு சண்டை காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டு விட்டது. நைட் முழுக்க தூங்காம இருந்தாரு. மறுநாள் காலையில் அவர் கேரவன் வெளியே நின்னுட்டு இருந்தாரு. என்ன ஆச்சுன்னு அவரின் உதவியாளரிடம் கேட்டேன். காயத்தால ஏற்பட்ட வலியில அஜித்தால் படுக்கவும், உட்காரவும் முடியவில்லை என சொன்னார்கள். ராஜ்கிரண் ஜெயிலுக்குள் உட்காந்திருக்கும் அஜித்தை அடிப்பது போல காட்சி எடுத்தோம். அப்போது உள்ளே சென்ற ராஜ்கிரண் அஜித் வலியால் துடிப்பதை பார்த்து ஃபீல் பண்ணாரு. நாங்க உடனே அஜித்திடம் ரெஸ்ட் எடுங்க. கேப் எடுத்துட்டு பண்ணிருக்கலாம் என சொன்னதுக்கு அதை மறுத்து ஷூட்டிங் முடியும் வரை ஒத்துழைத்தார் என திருமுருகன் தெரிவித்துள்ளார்.

அஜீத் கதாநாயகனாகவும், மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அஜீத்-எச்.வினோத் காம்போவை, அவர்களின் சமீபத்திய வலிமை படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூருடன் இந்தப் படம் மீண்டும் இணைகிறது. கபூர் தனது பேவியூ ப்ராஜெக்ட்ஸ் பேனரின் கீழ் படத்தைத் தயாரிக்கும் அதே வேளையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை விநியோகிக்கவுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்த இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் படத்திற்கான டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியிடவில்லை

- Advertisement -

சமீபத்திய கதைகள்