- Advertisement -
முற்போக்கு சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்தின் 103வது திருத்தத்தை உறுதி செய்யும் அரசியல் சாசன பெஞ்ச் அளித்த 3:2 பெரும்பான்மை தீர்ப்பை எதிர்த்து திமுக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவுள்ளது.
நாட்டின் 82% மக்கள்தொகை கொண்ட எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசியினரின் சமூக நீதியையும், அரசியல் சாசனத்தின் அடிப்படைகளையும், மண்டல் கமிஷன் தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்ட இடஒதுக்கீடு கொள்கையையும் பாதுகாக்க மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். .
- Advertisement -