Friday, December 8, 2023 5:28 pm

பாகிஸ்தானில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

கோட்கி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் முகாமில் டஜன் கணக்கான குற்றவாளிகள் நுழைந்து, ஏழு போலீஸ் அதிகாரிகளைக் கொன்று 20 பேரைக் கடத்திச் சென்ற சம்பவம் நடந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு கடத்திய பலரை விடுவிப்பதற்காக குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இப்பகுதியில் முகாம் நிறுவப்பட்டது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்த பகுதி, மக்கள் நடமாட்டம் குறைந்த இடமாகவும், கொள்ளை, இலக்கு கொலைகள், கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் கொள்ளையர்களின் வலுவான மறைவிடமாகவும் உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்