தளபதி விஜய்யின் வாரிசு வின் முதல் சிங்கிள் இறுதியாக வந்துவிட்டது! ரஞ்சிதாமே என்று பெயரிடப்பட்ட, பெப்பி டிராக்கில் விஜய் ஒரே நேரத்தில் பாடகராகவும் நடனக் கலைஞராகவும் மாறுகிறார். பாடலுக்கான யூடியூப் இணைப்புடன் அதைத் தெரிவிக்க தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களுக்கு அழைத்துச் சென்றனர். பாடலுக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
இப்போது இந்த ‘ரஞ்சிதமே’ பாடல் வேறொரு பாடலின் காப்பி என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். எப்போதுமே இது போன்ற காப்பி கேட் தகராறில் அனிருத் தான் மாட்டுவார், இப்போது அதில் சிக்கியிருப்பவர் இசையமைப்பாளர் தமன். ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் இந்த பாடலை கிழித்து தொங்கவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தமன், 2004 ஆம் ஆண்டு பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவருடன் நடித்த பரத், சித்தார்த், நகுல் ஆகியோர் நடிப்பை தொடர இவர் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். தெலுங்கு இண்டஸ்ட்ரியில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறார். ‘காஞ்சனா’, ‘ஒஸ்தி’ போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இந்த ‘ரஞ்சிதமே’ பாடல், தெலுங்கு படமான கிராக்கில் வரும் ‘மாஸ் பிரியாணி’ என்னும் பாடலின் மெட்டில் அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கண்டுபிடித்து பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். என்னதான் கிராக் திரைப்படம் தமன் இசையில் வந்திருந்தாலும், தளபதி படத்துக்கு புதுசாக மெட்டமைக்காமல் இப்படியா பண்ணுவது என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுவும் போதாதென்று, ரஞ்சிதமே பாடலில் விஜய் ஆடும் நிறைய நடன ஸ்டெப்புகள், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’ பாடலில் சிவகார்த்திகேயன் போட்டு விட்டதாகவும், அதை அப்படியே விஜய் காப்பி அடித்து ஆடுகிறார் என்று கூறி , இரண்டு பாடல்களின் வீடியோ காட்சிகளையும் கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
வாரிசு ஒரு உணர்ச்சிகரமான குடும்பப் பொழுதுபோக்காக, நட்சத்திரப் பட்டாளங்களைக் கொண்ட படமாகும். வம்சி பைடிபள்ளி இயக்கியிருக்கும் இப்படத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, ஆர் சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சினேகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, எடிட்டர் பிரவீன் கே.எல், இசையமைப்பாளர் எஸ்.தமன் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவினர். படத்தின் கதையை வம்ஷி பைடிப்பள்ளி, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர்.