Friday, March 29, 2024 7:29 pm

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தாம்பரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வெள்ளிக்கிழமை புகுந்த நாகப்பாம்பு பொதுமக்களால் கொல்லப்பட்டது.

தாம்பரம் தாலுகா அலுவலகம் ஜிஎஸ்டி சாலையில் சானடோரியம் அருகே உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்குள் நாகப்பாம்பு புகுந்தது.

அறைக்குள் இருந்த ஊழியர்களும், மக்களும் அலறியடித்து அங்கிருந்து சிதறி ஓடினர். உடனே, சிலர் மரக் கட்டைகளை எடுத்து வந்து தாக்கியதில், பாம்பு இறந்து விட்டது.

பாம்பு இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாலுகா அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், பாம்பை கொல்ல தங்களுக்கு உரிமை இல்லை என்றும், அது குற்றம் என்றும், ஏழு ஆண்டுகள் சிறைக்கு அனுப்பலாம் என்றும் கூறினர்.

வெள்ளிக்கிழமைகளில் நாகப்பாம்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று கூறிவிட்டு, அருகில் இருந்த கடையில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்து வந்து இறந்த பாம்பின் மீது ஊற்றினர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்