Saturday, April 20, 2024 4:29 pm

துணிவு டப்பிங்கில் வெறித்தனம் காட்டும் அஜித்!! அதுவும் எங்கு தெரியுமா ? நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் ஒரு போஸ்டருடன் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்க படக்குழு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இப்படம் பொங்கல் அன்று தளபதி விஜய்யின் வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது. அஜீத்துக்கும் விஜய்க்கும் இடையே ரசிகர்கள் மோதலை கண்டு பல வருடங்கள் ஆகிறது.

இதனிடையே “வாரிசு” திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித்குமார் பெற்றுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்தது. இந்த செய்தி வெளிவந்த சில நாட்களிலேயே “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

மேலும் மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, இது குறித்து தனது பேட்டியில் கூறியபோது, நடிகர் விஜய்தான் இந்த விஷயத்தில் தலையிட்டு, “வாரிசு” திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை லலித்குமாருக்கு கிடைப்பது போல் பார்த்துக்கொண்டார் என்ற தகவலை கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் அதிக திரையரங்குகளை “துணிவு” திரைப்படத்திற்காக ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லலித்குமார், “வாரிசு” திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடமே கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆதலால் “வாரிசு” திரைப்படத்தை வெளியிட ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாக உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அண்மையில் தகவல் வெளியானது.

இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது என்பது உறுதியான நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் அதனை மஞ்சுவாரியார் உறுதிப்படுத்தி இருக்கின்றார். தனது இணையதள பக்கத்தில் துணிவு திரைப்படத்திற்கு டப்பிங் செய்யும் புகைப்படத்தை மஞ்சு வாரியர் பதிவு செய்திருக்கின்றார். இதனை அஜீத் ரசிகர்கள் பலரும் அதிகம் ஷேர் செய்து வருகின்றார்கள்.இந்நிலையில் அஜித் இன்று துணிவு படத்தின் டப்பிங் செய்துள்ளதாகவும் பிரபல கூறியுள்ளார் இதோ உங்கள் பார்வைக்கு

இன்று அஜித் டப்பிங் செய்த புகைப்படம் வெளியாகலாம் என்று தெரிகிறது .

துணிவு எச் வினோத் எழுதி இயக்கிய ஒரு ஹை-ஆக்டேன் ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்