தீபாவளி சிறப்பாக விஜயின் வாரிசு படத்தின் அப்டேட் வெளியானது போல அஜித்தின் துணிவு படத்திற்கு அப்டேட் வெளியாகுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்கள் காட்சி மட்டுமே ஷூட் செய்யப்பட வேண்டியுள்ளது.
விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.
எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இணைந்து பணியாற்றிய ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
There won't be any #Thunivu update today..#Deepavali #Diwali
— Ramesh Bala (@rameshlaus) October 24, 2022
இதனை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தின் அப்டேட் எதுவும் வருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்று துணிவு படத்தின் அப்டேட் எதுவும் இருக்காது என்று சினிமா வட்டாரங்களில் இருந்து நம்பதகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.