Thursday, April 25, 2024 9:49 pm

ஐஸ்வர்யா லெக்ஷ்மி பாபி சிம்ஹா நடித்த அம்மு படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் அம்மு அதன் டீஸர்களால் நல்ல சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானத் திரைப்படம் அம்மு.பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த படகோட்டியாக நடித்திருந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அம்மு படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.

தென்றலாக வீசும் பெண் புயலாக மாறினாள் என்னவெல்லாம் செய்வாள் என்பதுதான் அம்மு படம் கற்றுத்தரும் பாடம். அம்மு (ஐஸ்வர்யா லெக்ஷ்மி), ரவீந்திரநாத் ரோல் (நவீன் சந்திரா) ஒரு போலீஸ் அதிகாரி. இருவருக்கும் கதையில் தொடங்கத்திலேயே திருமணம் நடக்கிறது. ரொமான்ஸ், காதல் என அழகாக வாழ்க்கை செல்ல, ஒரு நாள் கணவனின் உண்மை முகம் தெரிகிறது. அடிப்பது புருஷ லட்சணம் என்ற மிதப்போடும் சுற்றும் ரவீந்திரநாத் தினமும் மனைவியை அடித்து துன்புறுத்துகிறார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கணவனின் அடியால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீணமான அம்மு தனது கணவனுக்கு சரியான படத்தை கற்றுக்கொடுக்க காத்திருக்கிறாள். இந்த நேரத்தில், இரண்டு கொலை செய்த குற்றவாளி பிரபு (சிம்ஹா) தனது தங்கையின் திருமணத்தை பார்க்க பரோலில் வெளியில் வர, அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொள்ளும் அம்மு, பரோல் கைதியை தப்பவைத்து கணவனை பழிவாங்க திட்டம் தீட்டுகிறாள். அம்முவின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் அம்மு கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லெக்ஷிமியின் நடிப்பு தான். கணவரிடத்தில் அன்பை பொழியும் போதும், கணவனிடம் அடிவாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீரும் கம்பளையுமா நிற்கும் போதும் ஸ்கோரை அள்ளி விடுகிறார். குறிப்பாக கணவன் மீது இருக்கும் ஆத்திரத்தை காயப்போட்ட சண்டையில் காட்டி, கத்தி அழும் காட்சியில் உண்மையில் பின்னி இருப்பார் ஐஸ்வர்யா லெக்ஷிமி.

குற்றவாளியாக வரும் பாபி சிம்ஹா இடைவேளைக்கு பிறகே வந்தாலும், கதைக்கு பொருந்தி உள்ளார். இருந்தாலும் அவர் கதாபாத்திரத்திற்கு இன்னும் அழுத்தத்தை கொடுத்து இருக்கலாம். அதேபோல, இசை மனதில் பதியவில்லை. எடிட்டிங்கும் ஒளிப்பதிவிலும் இயக்குநர் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். அதே போல அகங்காரம் பிடித்த கணவராக வரும் நவீன் சந்திரா அனைத்து இடத்திலும் ஒரே லுக், அவர் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்.

இயக்குநர் சாருகேஷ் சேகர் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கதையை கொடுத்து இருக்கிறார். கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருஷன் அவன் எது செய்தாலும், அமைதியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தப்பு செய்தால் அது யாராக இருந்தாலும் துணிந்து நில் என்பது போன்ற வசனங்கள் மனதை கவரும் வகையில், சிந்திக்கும் வகையிலும் இருந்தது. மொத்தத்தில் அம்மு திரைப்படம் சமுதாயத்தில் பல பெண்கள் சந்தித்து வரும் வன்முறையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

மொத்தத்தில், நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை வெளிப்படுத்தும் படம்தான் அம்மு. ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் நவீன் சந்திரா ஆகியோரின் அசாத்தியமான நடிப்பு பாராட்டுக்குரியது மற்றும் படத்தின் முக்கிய சொத்து. முதல் பாதியில் சில பின்னடைவுகள் மற்றும் யூகிக்கக்கூடிய கதைக்களம் தவிர, படம் கண்ணியமானது மற்றும் இரண்டாவது சிந்தனை இல்லாமல் ஸ்ட்ரீம் செய்யப்படலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்