Thursday, March 28, 2024 6:07 pm

சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் படம் சக்கையா மொக்கையா படத்தின் விமர்சனம் இதோ !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தில் சூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரியும் சிவகார்த்திகேயனும் எட்டு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர், மேலும் முந்தைய படம் கடைசியாக வெளியான ‘டான்’ படத்தின் ஒரு பகுதியாகும். சிவகார்த்திகேயனின் அடுத்த வெளியீடான ‘பிரின்ஸ்’ படத்திலும் சூரி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அவர் படத்தின் கிளைமாக்ஸில் தோன்றுவார். கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ரோலக்ஸாக சூப்பர்ஹிட் தோற்றத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு தமிழில் க்ளைமாக்ஸில் மற்றொரு கேமியோ தோற்றத்தைப் பார்க்கப் போகிறோம், மேலும் சூரியின் பாத்திரம் படத்திற்கு வலு சேர்க்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ‘பிரின்ஸ்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் சூரியும் கலந்து கொண்டு சிவகார்த்திகேயனை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர், டான் என தொடர்ந்து இரு வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கத்தில் படு ஜாலியாக வந்துள்ள படம் தான் பிரின்ஸ்.

இந்த தீபாவளிக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் என எந்தவொரு முன்னணி நடிகர்கள் படமும் வராதது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தியேட்டர் ஓனர்களுக்கும் ஏமாற்றம் தான்.

ஆனால், அதை சரிசெய்யும் வகையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் என இரு படங்கள் இன்று வெளியாகி உள்ளது. டான் படமே பாதி க்ரிஞ்ச் என விமர்சிக்கப்பட்ட நிலையில், பிரின்ஸ் படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

தேவக்கோட்டை எனும் ஊரில் சுதந்திரத்திற்கு பின்னும் பிரெஞ்சுகாரர்களும், பிரிட்டிஷ்காரர்களும் சிலர் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர். அப்படி ஒரு குடும்பத்து பெண்ணான ஜெஸிகாவை (மரியா) பள்ளியில் சமூக அறிவியல் வாத்தியாரான அன்பு (சிவகார்த்திகேயன்) காதலிக்க தொடங்க ஆரம்பத்தில் பிரெஞ்சுக்கார பெண் என ஓகே சொல்லும் அப்பா சத்யராஜ், பின்னர் அந்த பெண் பிரிட்டிஷ்காரி என்பது தெரிய வர மறுப்பு தெரிவிக்கிறார். ஹீரோயின் அப்பாவும் எதிர்ப்பு. இறுதியில், இந்திய வாலிபனும் இங்கிலாந்து பூர்வகுடியான இளம்பெண்ணும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் பிரின்ஸ் படத்தின் கதை.

சிவகார்த்திகேயன் ரிங்டோனான கும்முற டப்புற பாடலுக்கு என்ன அர்த்தம் என ஹீரோயின் கேட்பதும், அதற்கு சிவகார்த்திகேயன் கொடுக்கும் விளக்கமும் காமெடி ரகளை. அதே போல பாட்டில் கார்ட் என்றால் என்னவென்று தெரியாமல் சிவகார்த்தியேன் இஷ்டத்துக்கு ரீல் விட கடைசியில் சுரைக்காயைத்தான் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளும் காய்கறி கடை காட்சியும் கலகலப்புக்கு பஞ்சமில்லை. சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் வில்லனாக பிரேம்ஜி பூபதி பாண்டியன் எனும் ரோலில் மேலும், காமெடி நெடி தூவ உதவி உள்ளார்.


ம் எல்லாம் பார்க்காத பெரிய சிந்தனையாளராக சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக இந்த படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். தேசப்பற்றும் அவருக்கு அதிகம். ஆரம்பத்தில் மகன் பிரெஞ்சுக்கார பெண்ணை காதலிக்கிறான் என நினைத்து ஓகே சொல்லும் சத்யராஜ், பின்னர் அந்த பொண்ணு பிரிட்டிஷ்காரி என்று தெரிந்ததும், இந்தியவையே அடிமைப்படுத்திய தேசத்து பொண்ணு வேண்டாம் என வெறுக்கிறார். சத்யராஜை சிவகார்த்திகேயன் சமாளிக்கும் இடங்களில் எல்லாம் தியேட்டரே சிரிப்பொலியில் மிதக்கிறது.

டான் படத்தில் பார்த்ததை விட படு ஜாலியான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தியர்கள் ஹானஸ்டாக இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்புடன் இருக்கும் நாயகி ஜெஸிகாவின் அப்பாவுக்கு தனது நேர்மையை புரிய வைக்கும் இடத்தில் எல்லாம் நடிப்பில் அசத்தி உள்ளார். நாயகியை லவ் செய்யும் காட்சிகள், அவருடன் ஆடிப் பாடும் காட்சிகள் எல்லாமே சிவகார்த்திகேயன் பர்ஃபார்மன்ஸ் பிரமாதம்.

ஜாதி, மத

ஜதி ரத்னலு படமே ஒரு ஜாலியான படம் தான். அந்த படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இப்படியொரு கதையை கூட படமாக ஜாலியாக கொடுக்க முடியும் என நினைத்ததே பெரிய பிளஸ் தான். சிவகார்த்திகேயன், சத்யராஜ் காம்போ, பிரேம்ஜியின் கலாட்டா, நாயகி மரியாவின் மெச்சூரான நடிப்பு என அனைத்துமே ரசிக்க வைக்கிறது. லவ் போர்ஷனுக்கு தமன் கொடுக்கும் பிஜிஎம், காமெடி டிராக்கிற்கு அவர் பயன்படுத்தி உள்ள பிஜிஎம் என ரசிகர்களை பல இடங்களில் என்கேஜ் செய்யும் மேஜிக் உள்ளிட்ட விஷயங்கள் பெரும் பிளஸ் ஆக அமைந்துள்ளது. முதல் நாள் அதிகாலை காட்சியே கல்லூரி பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள் சூழ தியேட்டரில் சிரிக்கும் சத்தம் டான் படத்தை போல பாக்ஸ் ஆபிஸுக்கு பிளஸ் ஆக அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆழமான அழுத்தமான கதையெல்லாம் வேண்டாம் என நினைத்து லைட் ஹார்டட் மூவியாக இயக்குநர் அனுதீப் எடுத்துள்ள இந்த படம் அந்த காரணத்திற்காகவே பல இடங்களில் மைனஸ் ஆக தெரிகிறது. காமெடி என்கிற பெயரில் பல இடங்களில் க்ரிஞ்ச் செய்கின்றனர் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆனந்த்ராஜ் ஸ்டேஷன் காமெடி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்க பார்டர் போடுவது என பல கொடுமைகளும் படத்தில் உள்ளது. சீரியஸான படம் எல்லாம் வேண்டாம், இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் சென்று ஜாலியா சிரித்துக் கொண்டே ஒரு படத்தை பார்க்கலாம் என்றால் தாராளமாக பிரின்ஸ் படத்தை ஒரு முறை பார்க்கலாம். லேக் அடிக்கிறது என அவர்களே 12 நிமிடங்களை தூக்கிய நிலையில், 2 மணி நேரம் கட கடவென படம் ஓடி முடிவது பிரின்ஸ் படத்தின் பிரச்சனையை சற்றே குறைத்துள்ளது.


‘பிரின்ஸ்’ ஒரு காதல் காமெடி என்று கூறப்படுகிறது, மேலும் படம் இரண்டு பள்ளி ஆசிரியர்களின் காதலை விளக்குகிறது, ஆனால் நகைச்சுவையான வழியில். மரியா ரியாபோஷப்கா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்