- Advertisement -
பள்ளிப் பேருந்துகளில் முன் மற்றும் பின்புற கேமராக்கள் மற்றும் வாகனத்தின் பின்புறம் சென்சார்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் விபத்தில் சிக்குவதைத் தடுக்கும் வகையில் அனைத்துப் பள்ளிப் பேருந்துகளிலும் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து ஜூன் 29-ம் தேதி மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் வரைவு வரைவை உள்துறைச் செயலர் வெளியிட்டார். இது தொடர்பான அரசாணையும் அரசு அனுமதியுடன் பிறப்பிக்கப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -