Sunday, April 14, 2024 7:47 pm

அல்லு தெறிக்கும் காந்தாரா படத்தின் முழு விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரிஷாப் ஷெட்டி தற்போது காந்தாரா பெறும் அனைத்து அன்பிலும் மூழ்கியுள்ளார். கடலோர கர்நாடகாவில் உள்ள நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட கன்னட மொழித் திரைப்படம், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. படம் ஹிந்தியில் அக்டோபர் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. IndiaToday.in உடனான பிரத்யேக அரட்டையில், ரிஷப் ஷெட்டி காந்தாராவின் எண்ணம் எங்கிருந்து உருவானது என்பதையும், கதையின் சாராம்சத்தில் சமரசம் செய்யாமல் எப்படி உண்மையாக இருக்க முடிந்தது என்பதையும் பற்றி விரிவாகப் பேசினார். பொருள். நாட்டில் நிலவும் அப்பட்டமான சாதி அரசியலை அதன் கிளைமாக்ஸ் முழுவதிலும் ஒரு சக்திவாய்ந்த செய்தியுடன் படம் எடுத்துக்காட்டுகிறது. இதுபற்றி விரிவாகப் பேசிய ரிஷப், படத்தின் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல.

கன்னட திரையுலகையே கதிகலங்க வைத்த காந்தாரா திரைப்படம் இன்று தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.படத்தை பார்த்து மிரண்டு போன நடிகர் தனுஷ், பிரபாஸ், கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என புரமோஷன் செய்து வருகின்றனர்.

புரமோஷன்களை எல்லாம் தாண்டி ஆதிக்குடிகளின் உரிமைப் போராட்டத்தை சினிமா எக்சலன்ஸ் உடன் திரையில் கடத்தியிருக்கும் ரிஷப் ஷெட்டியின் மேக்கிங்கிற்காகவே படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். வாங்க காந்தாரா விமர்சனத்துக்குள் செல்வோம்..

காந்தாரா என்றால் மாயவனம். ரிஷப் ஷெட்டி இயக்கி டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், நிம்மதி இல்லாமல் அலையும் அரசன் ஒரு பழங்குடியின மக்கள் வழிபடும் தெய்வத்தின் சிலை கண்டதும் நிம்மதியடைய அந்த மக்களுக்கு தனது நிலத்தின் பெரும்பகுதியை எழுதிக் கொடுக்கிறார். ஆனால், அதன் பின்னர் சில காலம் கழித்து மன்னனின் வம்சாவளி வந்த ஒருவர் மக்களிடத்தில் இருந்து அதை பிடுங்க நினைக்கிறார்.

பூத கோல நடனம் ஆடும் அப்பா ரிஷப் ஷெட்டியின் மீது அந்த சிறு தெய்வத்தின் அருள் வந்து இறங்கியது போல நடனமாடி அப்போ, இதுவரை நான் கொடுத்த நிம்மதியை திருப்பிக் கொடுக்க முடியுமா? என கேட்கிறது. மேலும், தானமாக வழங்கிய நிலத்தை மீண்டும் கேட்கும் நீ ரத்தம் கக்கி சாவாய் என சாபமிட, அதே போல அந்த அரச வம்சாவளி வந்தவர் இறக்கிறார். அதன் பின்னர் நிலம் அந்த பழங்குடியின மக்களுக்கே சொந்தமாகிறது.

அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து, 1990 காலக்கட்டம் என காட்டப்படுகிறது. பூர்வக்குடி மக்களை வன அதிகாரிகள் உதவியுடன் அரசு அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறது. ஆனால், அதை எதிர்த்து அந்த பூதகோல நடனமாடியவரின் மகன் ஹீரோ சிவா (ரிஷப் ஷெட்டி) எப்படி போராடுகிறார் என்பது தான் இந்த காந்தாரா படத்தின் ஒட்டுமொத்த கதையே..

கர்நாடகாவில் பிரபலமான கம்பளா ரேஸ் மூலம் ஹீரோ ரிஷப் ஷெட்டி எருமை மாடுகளை விரட்டிக் கொண்டு வரும் என்ட்ரியே தியேட்டரை தெறிக்கவிடுகிறது. அப்பா, மகன் என இரு வேடங்களிலும், பூதகோல நடனம் ஆடும் காட்சிகளிலும் ரிஷப் ஷெட்டி தான் ஒரு ஆகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். பாசம், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் ரசிகர்களையும் தனது இயக்கத்தால் கவர்ந்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசனாக நடித்திருந்த கிஷோர் காந்தாரா படத்தில் வன அதிகாரியாக வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆதிக்குடி மக்களை விரட்டியடிக்க வரும் அவரது கதாபாத்திரம் கடைசி வரை நீங்க நல்லவரா? கெட்டவரா? என கெஸ் பண்ண முடியாத ரீதியிலே அமைக்கப்பட்டு இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

காந்தாரா திரைப்படம் கன்னட திரையுலகில் கலெக்‌ஷனை அள்ளிய நிலையில், தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கேஜிஎஃப் படத்தை தயாரித்து ஹம்பலே தயாரிப்பு நிறுவனம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்துள்ளது. சாமி ஆடும் காட்சிகள் எல்லாம் பேய் படம் பார்க்கும் எஃபெக்ட்டை இசையமைப்பாளர் அஜனீஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் கொடுத்துள்ளது படத்தை வேறு தளத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. ஆதிக்குடிகளின் வாழ்க்கையை சில ஆதயத்திற்காக மாற்ற அரசு ஏன் முயற்சிக்க வேண்டும்? அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை என ஆணித்தரமாக வசனங்கள் மூலமும் காட்சிகள் மூலமாகவும் கிளைமேக்ஸில் நாயகன் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள விதம் தான் அனைவரையும் படத்தை பார்க்க தூண்டுகிறது.

மக்களின் உரிமைக் குரலுக்கான படத்தில் தேவையில்லாமல் வன அதிகாரிகளுடன் நாயகன் சண்டை போடும் காட்சிகளில் ஓவர் பில்டப் வைத்திருப்பதை தவிர்த்து இருக்கலாம். ஆங்காங்கே சில தொய்வுகள் கதையின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், கதையின் நோக்கம், காட்சியின் வீரியத்தை பார்க்கும் போது இந்த சின்ன சின்ன குறைகள் பெரிதாக தெரியாது. நிச்சயம் தியேட்டருக்கு சென்று காந்தாரா படத்தை பார்த்து வியக்கலாம்.

ஒரு கதையிலும் ஒரு படத்திலும், நாம் நேர்மறையைப் பரப்ப விரும்புகிறோம். நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. காந்தாராவிடம் அந்த நேர்மறை உள்ளது. அரசும், வனத்துறை அதிகாரிகளும் இதைத்தான் செய்கிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள், எனவே நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நோக்கத்திற்காக வேலை செய்தால், விஷயங்கள் வேறுவிதமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தெரியாதவர்களுக்கு, PS-1 மற்றும் விக்ரம் வேதா போன்ற பல படங்களை விட காந்தாரா சிறப்பாக செயல்படுகிறது. 100 கோடியை எட்டுவதற்கு மிக அருகில் உள்ளது. காந்தாரா சப்தமி கவுடாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்