Saturday, April 20, 2024 1:12 pm

அதிகாரபூர்வமாக வெளியான பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல ரியாலிட்டி போட்டித் தொடரான பிக்பாஸின் தமிழ் ஸ்பின்-ஆஃப் தொடரான பிக் பாஸ் தமிழ், விரைவில் அதன் 6வது சீசனுடன் மீண்டும் வர உள்ளது. எண்டெமால் ஷைன் இந்தியா தயாரித்த இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாகி வருகிறது.

தொலைக்காட்சி சேனல்கள் குறிப்பிட்ட சாமானியர் ஹவுஸ்மேட்களைத் தேர்ந்தெடுத்த முந்தைய சீசன்களைப் போலல்லாமல், இந்த சீசனில் சாமானியப் போட்டியாளர்களைத் தேர்வு செய்யாமல், பிரபலங்களுடன் பொது மக்களும் ஹவுஸ்மேட்களாக இடம்பெறுகின்றனர்.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை மறுதினம் ஆரம்பமாக உள்ளது. அத்தோடு கடந்த சில மாதங்களாக போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வந்தன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் குவாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளனர்.

நூறு நாட்கள் குடும்பத்தை மறந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும். வீட்டை சுற்றி பலர் இருந்தாலும், பல காமரா போட்டியாளர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும். வெளியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால்,உள்ளே எத்தனை நாட்கள் இருக்கிறீர்கள் என்பதுதான் கெத்தே.

அத்தோடு போட்டி , பொறாமை, சண்டை, அழுகை என பலவற்றையும் சமாளித்து, உள்ளே இருப்பவர்களுக்கு மட்டும் இல்லாமல் வெளியில் இருப்பவர்களுக்கும் பிடிக்கனும், அப்போது தான் டைட்டிலை தட்டி தூக்க முடியும். கடந்த முறை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பொது மக்களின் மனதை கவர்ந்து வந்த ராஜூ டைட்டிலை தட்டி சென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்கா பிடித்தார்.

அத்தோடு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த முறையே இவரின் பெயர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது

அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இதில் சீரியல் நடிகர் அஸிம், விஜய் டிவியில் காமெடியில் கலக்கிய அமுதவாணன், சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால், சோஷியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. இவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளது விஜய் டிவி.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 19 போட்டியாளர்கள் குறித்த அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிரபல ரியாலிட்டி போட்டித் தொடரான பிக்பாஸின் தமிழ் ஸ்பின்-ஆஃப் தொடரான பிக் பாஸ் தமிழ், விரைவில் அதன் 6வது சீசனுடன் மீண்டும் வர உள்ளது. எண்டெமால் ஷைன் இந்தியா தயாரித்த இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் தொடர் 2017 இல் தொடங்கப்பட்டு சூப்பர்ஹிட் ஆனது. அதை ஆரவ் நஃபீஸ் வென்றார், அதே சமயம் அக்டோபர் 3, 2022 அன்று திரையிடப்பட்ட கடைசி சீசன் (சீசன் 5), அதன் வெற்றியாளராக ராஜு ஜெயமோகனை அறிவித்தது.

வரவிருக்கும் சீசன், ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 9, 2022 அன்று மாலை 6 மணிக்கு கோலிவுட் மெகாஸ்டார் கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகமாகும். 2017 இல் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்