Thursday, April 18, 2024 7:38 pm

சற்றுமுன் உடல் நல குறைவால் பிரபல நடிகர் மரணம் !! அதிர்ச்சியில் முழ்கிய திரையுலகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஈழ தமிழர்களால் மட்டுமல்லாமல், உலக தமிழர்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்று காலமானார்.

இலங்கை திரைப்பட நடிகரும், தமிழ் படங்களில் நடித்தவருமான நடிகர் தர்ஷன் தர்மராஜ், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்து, உலக தமிழர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர். நேற்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட ‘பிரபாகரன்’, ‘சுனாமி’ உட்பட 25க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார். சினிமா துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

2008ஆம் ஆண்டு வெளியான ‘பிரபாகரன்’ எனும் இருமொழி திரைப்படத்தில் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகப் பாத்திரமேற்று நடித்திருந்தார். இதனையடுத்து பிரபாகரன் திரைப்படமும், தர்ஷனும் சில தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.அசோக ஹந்தகம இயக்கி 2012ஆம் ஆண்டு வெளியான ‘இனி அவன்’ தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தமைக்காக தர்ஷனுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்திருந்தன. இந்தத் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் ‘கான்’ திரைப்பட விழாவில் 2012ஆம் ஆண்டு பிரன்ச் மொழி உப தலைப்புக்களுடன் திரையிடப்பட்ட மைகுறிப்பிடத்தக்கது.

2018ம் ஆண்டு வெளியான ‘கோ’மாளி கிங்ஸ்’ முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக அமைந்திருந்தது. இறுதியாக இவர் ‘ரெல்ல வெரல்லட் ஆதரே’ மற்றும் ‘கொலம்ப’ ஆகிய சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்ஷன் தனது 41 வயதில் காலமானார். இவரது இறப்புக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்