Tuesday, April 16, 2024 6:42 am

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் கதை இதுவா ? செம்ம மிரட்டலா இருக்கே !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘துணிவு’ என்று பெயரிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்டனர். இந்த போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், ‘துணிவு’ படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் நிஜ வாழ்க்கை நபரால் ஈர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1987 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையில் கிட்டத்தட்ட 13 பேர் கைது செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது என்று கூறி, சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படக் காட்சி வலம் வருகிறது. குற்றவாளிகள் போலீஸ் உடையணிந்து, சப்மஷைன் துப்பாக்கிகள் மற்றும் ரைபிள்களுடன் ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் பெரும் தொகையான ரூ. 6 கோடி.

அஜித்தை பொறுத்தவரை ஒரு இயக்குனர் இயக்கத்தில், படம் நடிப்பது பிடித்து விட்டால்.. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுப்பார். அந்த வகையில், ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ஆகிய இரண்டு ஹிட் படங்களை தொடர்ந்து… மூன்றாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தை மூன்றாவது முறையாக பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு துவங்கிய பின்னர் நீண்ட நாட்கள் ஆகியும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த எந்த தகவலையும் படக்குழுவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஏற்கனவே வலிமை படத்தின் அப்டேட் வெளியாக தாமதம் ஆனதால், படக்குழுவை தொடர்ந்து நச்சரித்து… செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் அட்ராசிட்டி செய்த நிலையில், கடந்த ஒரு மாதமாக… போனி கபூரிடம் துணிவு படத்தின் அப்டேட் தகவலையும் கேட்க துவங்கினர்.

ஏற்கனவே ஸ்ரீதேவியின் பிறந்த நாள் அன்று, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை போனி கபூர் வெளியிடுவார் என காத்திருந்து ரசிகர்கள் ஏமாந்தனர். இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மாலை 6 மணிக்கு அஜித் நடித்த வரும் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதை குறித்த சீக்ரெட் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த 1985 ஆம் ஆண்டு பஞ்சாப் வங்கியில், 15 சீக்கியர்கள் போலீஸ் வேடத்தில் நுழைந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதேநேரம் அந்த வங்கியில் உள்ள ஊழியர்களுக்கோ… வாடிக்கையாளர்களுக்கோ… சிறு காயத்தை கூட அவர்கள் ஏற்படுத்தவில்லை. அனைத்தையும் அசைவுகளையும் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கதையை தான், தற்போது மையமாக வைத்து தற்போது துணிவு படத்தை இயக்குனர் ஹச் வினோத் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்ற கதையை மையமாக வைத்து தான்… ‘Money heist’ வெப் சீரிஸ் தொடரும் எடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே… ஏற்கனவே ‘துணிவு’ திரைப்படம் Money heist வெப் சீரிஸில் காப்பி போன்று எடுக்கப்படுகிறதா? என சில தகவல்கள் உலா வந்த நிலையில்… இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படம் வந்த பின்னரே… உண்மையான கதைக்களம் என்ன என்பது தெரியவரும்.

வங்கிக் கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது, 2019 இல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2017 இல் ஒன்பது பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது, இருவர் இறந்துவிட்டனர் மற்றும் பதின்மூன்றில் இருவர் திரும்பப் பெறப்பட்டனர். இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் தீவிரவாதியாக மாறிய முன்னாள் பஞ்சாப் போலீஸ் அதிகாரி லப் சிங்கால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. காலிஸ்தான் கமாண்டோ படையை உருவாக்க உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வங்கிக் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவர் லப் சிங்.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையின் பின்னணியில் உள்ள சில சொல்லப்படாத கதையை ‘துனிவு’ மூலம் அஜித் மற்றும் எச்.வினோத் வெளியிட உள்ளனர். இருப்பினும், படத்தின் கதையை உறுதிப்படுத்த படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் வரும் வரை காத்திருப்போம். ‘துனிவு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை, மேலும் படம் 2023 ஜனவரியில் பெரிய திரைக்கு வரக்கூடும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்