தன்னை பெற்று எடுத்த தந்தை தாய்யை தனியாக தவிக்கவிட்டு, மூன்றாவது நபர் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்

தற்போது ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் படத்தை இயக்கி வரும் புகழ்பெற்ற கோலிவுட் இயக்குனர் அட்லீ குமார் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்களுக்கு ஆச்சரியமாக, அவர் நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது தந்தையிடம் இருந்து சற்று தள்ளியே இருக்கிறார் விஜய்.

சில மாதங்களுக்கு முன் எஸ்.ஏ.சியின் பிறந்தநாள் வந்தது. அதனை தனது மனைவியுடன் மட்டுமே கேக் வெட்டி கொண்டாடினார் எஸ்.ஏ.சி. அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், நேற்று நடைபெற்ற இயக்குனர் அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் விஜய் கலந்துகொண்டுள்ளனர்.

சொந்த தந்தையின் பிறந்தநாளில் கலந்துகொள்ளாமல், யாரோ ஒருவர் மூன்றாவது மனுஷனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளீர்களே விஜய் என பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஜவான் SRK உடன் நடிகை நயன்தாரா நடித்துள்ளார், இது அவர்களின் முதல் ஒத்துழைப்பையும் நடிகையின் பாலிவுட் அறிமுகத்தையும் குறிக்கிறது. ஜவான் படத்தின் ப்ரோமோ வீடியோ சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது, இது படத்தின் வெளியீட்டு தேதியையும் வெளிப்படுத்தியது. இப்படம் ஜூன் 2023 இல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முன்னதாக, சென்னை ஷெரட்டன் கிராண்டில் நடந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்ட பாலிவுட் நட்சத்திரத்தின் புகைப்படம் கோலிவுட் பிரபலங்களுடன் சமூக ஊடகங்களில் பரவியது.