விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’ படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் சிறுமலை வனப்பகுதியில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். 1980-களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் கதை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, அறந்தாங்கி நிஷா, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். தெலுங்கில் ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஃபரியா அப்துல்லா, ‘வள்ளி மயில்’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆகிறார்.