மாரடைப்பால் பிரபல இயக்குநர் மரணம் !! ரசிகர்கள் அதிர்ச்சி

வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த ‘குண்டக்க மண்டக்க’ படத்தின் இயக்குநர் எஸ்.அசோகன் காலமானார்.

இவருக்கு வயது 64. இவர் தமிழச்சி, பொன்விழா போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். சென்னையில் வசித்து வந்த இவர், மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய உடலானது சென்னையில் இருந்து எடுத்து செல்லப்பட்டு அவருடைய சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை தெற்கு தெரு அவருடைய வீட்டில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு பிறகு இன்று இரவு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.