Monday, April 22, 2024 10:46 am

அரவிந்த் சாமி நடித்த ரெண்டகம் படத்தின் முழு விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘தீவண்டி’ புகழ் ஃபெலினி டிபி இயக்கத்தில் தமிழ் நடிகர் அரவிந்த் சுவாமி மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்த ‘ரெண்டகம்’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, மேலும் படம் செப்டம்பர் 23, 2022 அன்று திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான இப்படத்தில் நடிகை ஈஷா ரெப்பாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முதலில் செப்டம்பர் 2ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படம் சென்சார் பணி காரணமாக செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது, படம் இறுதியாக செப்டம்பர் 23 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.பி. ஃபெலினி இயக்கிய இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் மற்றும் ஜின்ஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போபன், ஈஷா ரெப்பா மற்றும் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள ரெண்டகம் மிரட்டியதா? இல்லை உருட்டியதா என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

பழைய விஷயங்களை மறந்த பில்லாவாக வருகிறார் டேவிட் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி. மும்பையில் (மறுபடியும்) டானாக இருந்த அவர் தான் டான் என்பதே தெரியாமல் தியேட்டரில் பாப்கார்ன் விற்பவராக இருக்க, அவருக்கு பழசை எல்லாம் நினைவூட்டும் பணியை மலையாள நடிகர் குஞ்சக்கோ போபனுக்கு வழங்கப்படுகிறது. அரவிந்த் சாமிக்கு பழைய நினைவுகள் எல்லாம் திரும்பியதா? குஞ்சக்கோ போபனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? என்பதை ட்விஸ்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஃபெலினி.

ஹாலிவுட் ஸ்டைலில் செம ஸ்டைலான கேங்ஸ்டர் படமாகவே இந்த ரெண்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேங்ஸ்டர் படமாக வருகிறதே என்கிற யோசனையும் எழத்தான் செய்கிறது. அரவிந்த் சாமிக்கு பழைய நினைவுகளை கொண்டு வர போராடும் குஞ்சக்கோ போபன் முதல் பாதியில் அசத்தினாலும், இரண்டாம் பாதியில் அவருக்கு கொடுக்கப்படும் அந்த பில்டப் எல்லாம் சுத்தமாக ஒட்டவே இல்லை.

வெறுமனே கேங்ஸ்டர் படமாக மட்டும் எடுக்காமல் செம ட்விஸ்ட் ஒன்று வைத்து த்ரில்லர் படமாக இயக்குநர் மாற்றியது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால், அந்த ட்விஸ்ட்டும் ஏகப்பட்ட ரசிகர்களால் எளிதில் கணிக்க முடிந்த ஒன்றாக இருந்து விட்டது தான் படத்திற்கு நெகட்டிவ் ஆக மாறி விடுமோ என எண்ணத் தோன்றுகிறது.

தரமான மேக்கிங்கிற்காக ஒளிப்பதிவாளர் கெளதம் ஷங்கரின் உழைப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இசையமைப்பாளர் ஏ.எச். காசிப்பின் பின்னணி இசையும் படத்தை நகர்த்த உதவுகிறது. ஜட்டியோடு வரும் கேங்ஸ்டர் ஜாக்கி ஷெராஃப் கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தன்னை உயிருக்கு உயிராக காதலித்த ஈஷா ரெப்பாவை நாயகன் போட்டுத் தள்ளும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

மேக்கிங்கில் மெனக்கெட்ட அளவுக்கு இயக்குநர் ஃபெலினி திரைக்கதையில் இன்னம் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் வேறலெவலில் வந்திருக்கும். சித்தார்த் அபிமன்யூவாக ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கி விட்ட அரவிந்த் சாமி மீண்டும் அதே போன்ற ஒரு கதாபாத்திரத்தை செய்திருந்தாலும் டேவிட் கதாபாத்திரம் அந்த அளவுக்கு ஈர்க்காதது மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், ஆக்‌ஷன் என்டர்டெய்னரைப் பற்றிய ஒரு பார்வையைக் கொடுத்தது, இதில் அரவிந்த் சாமி டேவிட் அக்கா தாவூத் வேடத்தில் நடித்துள்ளார், அவர் தனது பாதாள உலகத்தின் நினைவை இழந்தவராகவும், குஞ்சாக்கோ போபனை நண்பர்களாக ஆக்குவதற்காக பணியமர்த்தப்பட்டதாகவும் தெரிகிறது. அவனுடன் சேர்ந்து அவனது நினைவை மீட்டெடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குஞ்சாக்கோ மற்றும் அரவிந்த் இருவருமே தனித்துவம் வாய்ந்த தோற்றத்தில், குஞ்சாக்கோ ஒரு சிறிய மனித ரொட்டியை விளையாடி, சாதுவான தோற்றத்தைக் கொண்டுள்ளனர். டிபி ஃபெலினி இயக்கிய இப்படத்தில் ஜாக்கி ஷெராஃப், ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ் மற்றும் ஜின்ஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்