அஜித் மறுத்த கதையில் ஜீவா நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் பற்றி தெரியுமா? நீங்களே பாருங்க

‘Ajith 61’ படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அஜய் மற்றும் சிபி சந்திரன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், அதே நேரத்தில் ஜிப்ரான் படத்திற்கு இசையமைக்கிறார்.

அஜித்தின் முந்தைய படமான ‘வீரம்’ படத்துக்கும், ‘துணிவே துணை’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே ஜெய்சங்கர் நடித்த 1976 படத்திற்கும் இதே தலைப்பு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் தயாரிப்பாளர்கள் ‘துணிவே துணை’யை தலைப்பாக தேர்வு செய்தால், ஆரம்பகால படங்களிலிருந்து தலைப்பைப் பயன்படுத்திய படங்களின் பட்டியலில் ‘AK 61’ சேரும். இருப்பினும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்.

தல அஜித் பல மெகா ஹிட் திரைப்படங்களை தவற விட்டுள்ளார் அந்த திரைப்படங்களில் மற்ற நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது, அப்படிதான் அஜித்திற்காக எழுதப்பட்ட கதையில் ஜீவா நடித்து மெகா ஹிட் ஆனா திரைப்படத்தை பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. கேவி ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஜீவா நடித்த திரைப்படம் கோ, இந்த திரைப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து அஜ்மல் அமீர், கார்த்திகா நாயர், பியா பாஜ்பாய் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் ஜீவா ஒரு புகைப்பட கலைஞராகவும் ஊடகத் துறையில் வேலை செய்பவராகவும் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலில் கேவி ஆனந்த் அஜீத்துக்காக தான் எழுதினாராம், ஆனால் கால்ஷீட் காரணமாக அஜித் இந்த திரைப்படத்தை நிராகரித்துள்ளார்.

அதன்பின்பு இந்த திரைப்படம் சிம்புவிடம் சென்றது சிம்புவை வைத்து இயக்கலாம் என திட்டமிட்ட போது சிம்பு படப்பிடிப்பிற்கு வர மாட்டார் என தயாரிப்பாளர்கள் சிம்புவிற்கு மறுப்பு தெரிவித்தார்கள், அதன் பின்புதான் இந்த படம் ஜீவாவின் கையில் சென்றது பின்பு ஜீவா நடித்து மெகா ஹிட்டானது.

இந்த திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் எனக்கூறலாம்.

‘ஏகே 61’ படத்திற்கு ‘துணிவே துணை’ எனப் பெயர் சூட்டப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது. ஒரு திருட்டு த்ரில்லர் என்று அறிவிக்கப்பட்ட ‘ஏகே 61’ ஒரு வங்கிக் கொள்ளையைப் பற்றியது, மேலும் படத்தின் கதையைப் பற்றி இதுவரை பல செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். படத்திற்கு துணிச்சலான தலைப்பை வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும், த்ரில்லர் படத்திற்கு ‘துணிவே துணை’ என்ற தலைப்பை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், மேலும் அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக தயாரிப்பாளர்களின் சமூக ஊடக கணக்குகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.