உண்மையிலேயே கொய்யா இலையை இப்படி சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு காணாமல் போகுமா ? ஆரோக்கிய தகவல்

நாம் உண்ணும் உணவே பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் கொய்யா இலையை சாப்பிடுவதால் என்னனென்ன பயன்கள் என இதில் பார்க்கலாம்.

கொழுப்பு குறையும்

கொய்யா இலையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், ஆண்டி பாக்டீரியா எதிர்ப்பு திறன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதை தினமும் சாப்பிட்டு வரும்போது உடலில் தேங்கி இருக்கும் அடர்த்தியான கெட்டக் கொழுப்புகளை நீக்குகிறது. மேலும் இப்படி சாப்பிடுவது கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது.

இருதய நோய்களை விரட்டும்

கொய்யா இலைகளை வைத்து தயாரிக்கப்படும் கஷாயம் தொண்டை புண் மற்றும் சளி தேக்கத்துக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது. மேலும் இருமல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் வர விடாமல் இது தடுக்கிறது. கொய்யா இலையை காயவைத்து, அதை பொடிப் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தினமும் அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருதயம் தொடர்பான பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. அதுதவிர, உடல் எடை விரைவாக குறைக்கவும் இது உதவுகிறது.

மூச்சுக் குழாய் ஒவ்வாமைக்கு மருந்து

நன்றாக கொதிக்கும் நீரில் சிறிதளவு துளசி, இஞ்சியுடன் இந்த கொய்யா இலைகளையும் கலந்து போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொய்யா இலை வெந்த பிறகு, தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கிடைக்கும் நீரை தினந்தோறும் குடித்து வந்தால் மூச்சுக்குழாயில் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். இதே முறையில் தயாரிக்கப்படும் நீரை குடித்து வருவது செரிமானக் கோளாறையும் தடுக்கும்.

செரிமானக் கோளாறு நீங்கும்

ஐந்து கொய்யா இலைகளை, கொஞ்சம் சீரகத்துடன் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு தயாரித்த அந்த நீரை பருகி வந்தால், உடனடியாக வயிற்று சார்ந்த பிரச்னைகள் நீங்கும். செரிமானக் கோளாறு இருந்தாலும் உணவு எளிதில் சீரணமடையும். உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்புகளும் இதன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

இன்சுலின் சுரப்பியை தூண்டும்

கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் கொய்யா இலை ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.