Thursday, March 28, 2024 5:29 pm

கருணாஸ் நடிப்பில் உருவான ஆதார் படத்தின் முதல் விமர்சனம் இதோ!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆதார் என்பது ராம்நாத் பழனிகுமார் எழுதி இயக்கிய 2022 ஆம் ஆண்டு வெளியான தமிழ் க்ரைம் திரில்லர் திரைப்படமாகும். படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா, உமா ரியாஸ் கான், பாகுபலி பிரபாகர், திலீபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெண்ணிலா கிரியேஷன்ஸ் சார்பில் பி.சசீ குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஸ்ரீ காந்ததேவா இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். அதிகார வர்க்கத்திற்குள் மாட்டிக்கொள்ளும் ஒரு சாமானியனின் கதை ஆதார்

கதையின் கரு:

கட்டிடத்தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா பிரசவவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைபேறுக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் இனியா. இந்த நிலையில் திடீரென்று ரித்விகா காணாமல் போக, இன்னொரு பக்கம் மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் பிணமாக மிதக்கிறார் இனியா.

இதனையறிந்து கொண்ட கருணாஸ் பச்சிளங்குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலைய படியேறுகிறார். இறுதியில் காணாமல் போன ரித்விகா என்ன ஆனார்.. இனியாவின் இறப்புக்கு காரணம் என்ன..? கருணாஸின் வாழ்கை என்ன ஆனது என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்தான் ஆதார் படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கருணாஸூக்கு -கனமான கதாபாத்திரம். கைக்குழந்தையோடு மனைவியை தேடி பரிதவிப்பது, காவல்நிலையத்தில் மனைவியை மீட்டெடுக்க கெஞ்சுவது, அதிகாரவர்க்கத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இயலாமை என பல இடங்களில் கருணாஸ் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருப்பது சிறப்பு. அதே போல இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இவர்களைத்தவிர அருண்பாண்டியன் இனியா, உமா ரியாஸ் என இன்னபிற கதாபாத்திரங்கள் எதுவும் பெரிதாக சோபிக்கவில்லை

ஒரு காட்சிக்கும் அடுத்தக்காட்சிக்கும் இடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை இறுதிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம்நாத். முதல்பாதியில் கருணாஸ் மனைவியை தேடும் படலமும், இராண்டாம் பாதியில் அதிகாரவர்க்கமானது தன்னை தப்பிவித்துக்கொள்வதற்காக ரித்விகாவை வைத்து ஆடும் ஆட்டமும் திரைக்கதையாக நீள்கிறது.

இதற்கு முன்னதாக இதே போன்று வெளியான படங்களில் வசனங்கள் பலமாக அமைந்திருந்தன. ஆதாரில் அது மிஸ்ஸிங். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை ஓரளவு கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமும், வேகமும் இருந்திருந்தால் ‘ஆதார்’ இன்னும் அதிகமாக கவனம் பெற்றிருக்கும்.

கருணாஸ் ஓர் அபார கலைஞன் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். மனைவியை தேடி பரிதவிக்கும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார். ரித்விகாவின் தேர்ந்த நடிப்பும், இனியாவின் கேரக்டரும் ஓகே ரகம். காவல் அதிகாரியாக வரும் பிரபாகர் நல்ல நடிப்பு. வேறு எந்த கேரக்டர்களுக்கும் படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை

ஸ்ரீகாந்த் தேவா இந்தப்படத்தை ஒரு சிறந்த கம்பேக்காக யூஸ் பண்ணியிருக்கலாம். அசால்டாக டீல் பண்ணியிருக்கிறார். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே சுமார் ரகம் தான். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு எதார்த்தத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

வசனங்களில் நல்ல ஷார்ப்பும், திரைக்கதையில் கூடுதல் அழுத்தமும் இருந்திருக்கலாம். ஆனாலும் நடைமுறை நிதர்சனத்தை விமர்சனம் கடந்து படைத்திருப்பதால் ஆதாரை நம் அடையாளமாக்கிக் கொள்ளலாம்
3/5

- Advertisement -

சமீபத்திய கதைகள்