Friday, April 26, 2024 2:09 am

கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைக்கும் அஜித் !! அஜித் 61 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் 61வது படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஷெட்யூலை பாங்காக்கில் படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘அஜித் 61’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர், ‘ஏகே 61’ படத்தின் அடுத்த ஷெட்யூல் செப்டம்பர் 15 முதல் பாங்காக்கில் நடைபெறும் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்டமாக பூனாவில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூட்டிங் பாங்காக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் படக்குழு பாங்காக் செல்லவுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து ஏகே61 படத்தை இயக்கி வருகிறார் ஹெச் வினோத். பேங்க் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகிவரும் நிலையில், ஐதராபாத்தில் இதற்கான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட்டுகள் பிரம்மாண்டமாக போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டன.

இதையடுத்து இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. கிடைத்த கேப்பில் பிரிட்டனுக்கு பயணமானார் அஜித். தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடந்த நிலையில், இதை தொடர்ந்து லடாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் தனது சர்வதேச பைக் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ள அஜித், இந்தப்படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் பாங்காக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அஜித் உள்ளிட்ட படக்குழு பாங்காக் செல்லவுள்ளது. அங்கு 3 வாரங்களுக்கு சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பர் அல்லது பொங்கல் ரிலீசாக வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகின. வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமசையொட்டி தனுஷின் வாத்தி மற்றும் சிம்புவின் பத்து தல படங்கள் ரிலீசாக உள்ளன. இதனால் அவர்களின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

ஆனால் நீண்ட காலங்களாக சூட்டிங் நடத்தப்பட்டு வரும் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் மற்றும் ரிலீஸ் தாமதமாவது அஜித் ரசிகர்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாக வலிமை படமும் இதேபோல 2 ஆண்டுகள் கழித்து ரிலீசானது. இந்நிலையில் அதேபோல ஏகே 61 படமும் வெளியீட்டில் தாமமாகி வருகிறது.

இந்தப் படம் நிதி நெருக்கடி காரணமாகவே ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் விஜய் படத்தின் வாரிசை போல, இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் சிறப்பாக நடந்தால், அதைக்கொண்டு படத்தை முடித்துவிடலாம் என்று போனி கபூர் திட்டமிட்டு வருகிறாராம்.

இப்படத்தின் தலைப்பு வல்லமை அல்லது ராபரியாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படத்துக்கு ‘துணிவே துணை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆனால் இதுவரை படத்தின் தலைப்பு என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகததால், ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் ஏகே 61 திரைப்படம் குறித்து சரமாரியாக பேசப்படும் படத்திற்கு துணிவே துணை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காந்தி ஜெயந்தி அன்று அதாவது அக்டோபர் 2, 2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வங்கி திருட்டு என்று கூறப்பட்டது

பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் ஏகே 61 படத்தில் அஜீத் ஒரு சாம்பல் நிற கேரக்டரில் நடிக்கிறார், மேலும் அவர் இரண்டு வித்தியாசமான படங்களில் நடிக்கிறார்.

Ak61

AK 61 படத்திற்கு வல்லமை என்று பெயரிடப்பட்டதாக ஏற்கனவே வதந்திகள் பரவியிருந்தன என்பதும், இந்த மாதம் அது குறித்த அப்டேட் எதிர்பார்க்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஏகே 61 இசையில் ஜிப்ரான் மற்றும் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜிஎம் சுந்தர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி ஷங்கர், தெலுங்கு நடிகர் அஜய், நடிகை பூஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்