Saturday, April 20, 2024 4:21 am

ஓட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்த்த அஜித் 61 படத்தின் டைட்டில் FristLook பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் வட இந்திய பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டிங் டாபிக் ஆனது. லடாக், பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்குச் சென்றார். அஜித்தின் வரவிருக்கும் திட்டமான ‘AK61’ படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியரும், இந்தப் பயணத்தில் நடிகர் மற்றும் அவரது குழுவினருடன் சில இடங்களுக்குச் சென்றார்.

நடிகர் அஜித், வட இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ள அவரின் சூப்பரான புது லுக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பைக் ரைட், ரைஃபில் ஷூட்டிங் என அவருக்கு பிடித்த விஷயங்கள் பற்றிய தகவல்கள், ரசிகர்களை மகிழ வைத்தாலும், அஜித்தின் திரையுலக வாழ்க்கை கொஞ்சம் டல்லாக இருந்து வருகிறது.

இல்லடா.. டல்-லாம் இல்லடா..எங்க ஏகேவுக்கு தில்லுடா..! எனும் வகையில் நடிகர் அஜித் நடித்துவரும் ஏகே 61 குறித்த அப்டேட் குறித்த தகவல் பரவிவருகிறது. இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைக்கோர்த்த நடிகர் அஜித்தின் 61-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதுபோக, இப்படத்திற்கு, வீரம் படத்தில் அஜித் பயன்படுத்தும் ஜீப்பில் ‘துணிவே துணை’ என்ற வசனம் எழுதி இருக்கும். அந்த வசனம்தான், ஏகே 61 படத்தின் டைட்டில் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற அல்வா மாதிரியான தகவல்கள் பரவி வர,
அனைத்து அஜித் ரசிகர்களும் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று சோஷியல் மீடியாக்களில் டயலாக் பேசிவருகின்றனர்.

இந்த தகவல்கள் வைரலாகினாலும், இவை அனைத்தும் அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை. பெரும் பாலும் இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாகதான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை அஜித்தை வைத்து இயக்கிய
ஹெச்.வினோத் இப்படம் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என சூப்பர் டூப்பர் படங்கள் எடுத்த ஹெச்.வினோத் அஜித்துடன் இணைந்து இதுவரை, வேற மாறி என்று சொல்லும் அளவிற்கு எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை.இப்படமாவது பக்கவான ஹெச்.வினோத்தின் செய்கையாக அமையும் என எதிர்பார்ப்புக்கள் கோடி கணக்கில் குவிந்து வருகிறது.

விமானத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், நடிகர் அஜித்துடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படமும், அஜித் லேட்டஸ்ட் என்ற ஹேஷ்டாகில் வைரல் ஆகிவருகிறது.

அதன்படி இப்படத்திற்கு ‘துணிவே துணை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக அஜித் படத்திற்கு ‘வி’ வரிசையில் தலைப்பு இருந்து வந்த நிலையில் இந்த புதிய தலைப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் 61 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வந்துள்ளது அது என்னவென்னறால் அஜித் 61 படத்தின் டைட்டில் மற்றும் Firstlook வெளிவரப்போகிறது .21 அல்லது 22 தேதியில் இந்த வார இறுதிக்குள் கண்டிப்பாக வெளிவரும் என தகவல் இணையத்தில் கசிந்துள்ளது இதனால் ரசிகர்கள் அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்