29 C
Chennai
Tuesday, January 31, 2023
Homeசினிமாசினம் படத்தால் மாஸ் காட்ட நினச்சி பல்பு வாங்கிய அருண் விஜய் ! காத்து வாங்கிய...

சினம் படத்தால் மாஸ் காட்ட நினச்சி பல்பு வாங்கிய அருண் விஜய் ! காத்து வாங்கிய திரையரங்கம்

Date:

தொடர்புடைய கதைகள்

ஜவான் இயக்குனர் அட்லி மற்றும் மனைவி பிரியா தம்பதிக்கு...

திரைப்பட தயாரிப்பாளர் அட்லீக்கு, தனது முதல் குழந்தையான தனது மனைவி பிரியாவுடன்...

ஹன்சிகா மோத்வானியின் திருமண டீசர் இதோ !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி தனது...

பொன்னியின் செல்வன் 2 படத்தை பற்றிய முக்கிய அப்டேட்...

ஐமாக்ஸ் வடிவத்தில் பொன்னியின் செல்வன் 1 வெளியானதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம்...

சிம்புவின் பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பற்றிய...

பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான நம்ம சதம் பிப்ரவரி...

அஜித் காதுக்கு சென்ற அந்த விஷயம்!! வீக்கியை AK-62...

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, படம் அதிகாரப்பூர்வமாக மார்ச்...

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ திரைப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த வாரம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. படம் தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழையும் பெற்றுள்ளது, மேலும் படத்தின் இறுதி ரன் நேரத்தை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். படத்தின் தியேட்டர் பதிப்பு 1 மணி நேரம் 54 நிமிடங்கள் இருக்கும்,

பல நூறு படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் போராடி சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருப்பர் நடிகர் அருண் விஜய்.

21 வயதில் சினிமாவுக்கு வந்தாலும் 40 வயது மேல்தான் இவருக்கு சுக்கிரதிசை துவங்கியது போல.அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். அதன்பின் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஒரு விழாவில் பவுன்சர்கள் சூழ சிவகார்த்திகேயன் வருவதை பார்த்து ‘யாருலாம் மாஸ் ஹீரோன்னு கெத்து காட்டுறது விவஸ்த இல்லாம போச்சு’ என டிவிட்டரில் கிண்டலடித்தவர் இவர்.

தற்போது இவரின் நடிப்பில் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி வரும் அளவுக்கு பிஸியான நடிகராக மாறியுள்ளார். இவரின் நடிப்பில் உருவான ‘சினம்’ திரைப்படம் இன்று வெளியானது.

தற்போதெல்லாம் ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாளில் அதிகாலை 4 அல்லது 5 மணி காட்சி ஒன்றை ரசிகர்களுக்காக திரையிடுவார்கள். சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு அப்படி அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. அவ்வளவு ஏன், ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ‘கேப்டன்’ படம் வெளியான போதும் அதை செய்தார்கள்.

அந்த ஆசை அருண் விஜய்க்கும் வந்துவிட்டது போல.. அவர் நடிப்பில் இன்று வெளியான சினம் படத்திற்கு சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் காலை 8 மணி சிறப்பு காட்சிக்கு திட்டமிட்டனர். ஆனால், தியேட்டர்களில் இந்த படத்தை பார்க்க யாரும் வராமல் போனதால் காட்சியை ரத்து செய்துள்ளனர்.

இதையடுத்து, ஹீரோவாக பில்டப் செய்யப்போய் அதுவே அவர்களுக்கு நெகட்டிவாக அமைகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

‘சினம்’ படம் ரசிகர்களுக்கு முக்கியமான செய்தியை சொல்லும் படமாக இருக்கும். இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார், நடிகை பாலக் லால்வானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய கதைகள்