உங்கள் வீட்டில் தீராத கடன் பிரச்சனையா உங்களுக்கு! இந்த மாலையை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்!

சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என்பதை உணர்ந்து பழங்காலந்தொட்டே தாமரை மணிமாலையை பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

பணத்தை வசீகரிக்கும் தன்மையை தாமரை மணிமாலை கொண்டுள்ளதால் இது மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. பணத்தை ஈர்ப்பதில் தாமரை மணிமாலைக்கு அதீத சக்தி உண்டு என்பது முன்னோர்களால் கண்டறியப்பட்ட உண்மை.தாமரை மணிமாலையை பயன்படுத்தும் முறைகள் :

காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.தாமரை மணிமாலையை சுபநிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அணிந்து கொள்வது சிறப்பு. மேலும் அசைவம் சாப்பிடும்போதும், அசுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போதும் தவிர்த்து கொள்வது நல்லது.இரவு தூங்க செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது நல்லது.

தாமரை மணிமாலை நூலில் கோர்க்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.மாதம் ஒருமுறை சுத்தமான வேப்பெண்ணெயில் நனைத்த துணியை வைத்து துடைத்து வெயிலில் வைத்து உலர்த்தி பயன்படுத்தவும். வேப்பெண்ணெய் பயன்படுத்துவதால் எறும்புகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்.

தாமரை மணிமாலை வீட்டில் இருந்தால் ஏற்படும் பயன்கள் :பணம் ஈர்க்கும் சக்தியாகவும், பொருளாதாரத்தில் மேம்படவும் உதவுகிறது.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்.பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது.வேலை கிடைப்பதில் தொடர்ந்து தடை.

வியாபாரத்தில் தேக்க நிலை.தீராத கடன் பிரச்சனை.தேவையற்ற பணவிரயம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.இந்த தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்களும் அங்கு அதிகளவில் ஏற்படும் என்பது ஐதீகம்.