Thursday, June 13, 2024 3:59 am

ஓஹோ இது தான் விஷயமா சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ரவீந்திரனை திருமணம் செய்ய முக்கிய காரணமே இதுவா ? ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், நடிகை மகாலட்சுமியும் சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இருப்பினும், பணத்துக்காக மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டிய ட்ரோல்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ரவீந்தர் தப்பிக்கவில்லை, மேலும் அவர் தோற்றத்திற்கும் எடைக்கும் இலக்கானார்.

இந்த விமர்சனத்தால் மனம் தளராத ரவீந்தர், மகாலட்சுமியுடன் இன்ஸ்டாகிராம் லைவ் செஷன் செய்தார். ரவீந்தரை கேலி செய்ய வேண்டாம் என்று மஹாலக்ஷ்மி கேட்டுக்கொண்டார். ரவீந்தர் மட்டுமல்ல, யாரையும் இழிவுபடுத்தக் கூடாது என்று அன்பே வா நடிகை கூறினார்.

தனியார் தொலைக்காட்சிகளில் நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்கள் விரும்பும் பாடலை ஒளிபரப்பும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் வி.ஜே.மகாலட்சுமி. தன்னுடைய வசீகரமான குரலினாலும். அழகின் தோற்றத்தினாலும் 2000 ஆண்டு காலகட்டத்தில் இருந்த இளைஞர்களை தன் வசப்படுத்திக் கொண்டவர் வி.ஜே.மகாலட்சுமி.

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தபோதே அவருக்கென ஒரு ரசிகர் பட்டாலும் உருவாகியது. இதனால் மகாலட்சுமிக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்து குவிந்தது. இதனைத் தொடர்ந்து டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கியவர், அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் செட்டில் ஆனார்.

அணில் – மகாலட்சுமி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். கணவரை விட்டு பிரிந்த மஹாலக்ஷ்மி மீண்டும் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க தொடங்கினார். அப்போது ஏற்கனவே திருமணம் ஆன சீரியல் நடிகர் பாஸ்கர் என்பவரை காதலித்து தனி குடித்தனம் நடத்த தொடங்கினார் மஹாலக்ஷ்மி. இது பாஸ்கர் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

தன்னுடைய கணவரை அபகரித்து கொண்டார் மகாலட்சுமி என பாஸ்கர் மனைவி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து, மகாலட்சுமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தீவிரமாக களம் இறங்கினார் பாஸ்கர் மனைவி. இதனை தொடர்ந்து, தான் செய்வது சட்டப்படி தவறு என்பதை உணர்ந்து, இதனால் சட்ட நடவடிக்கைகளில் சிக்க நேரிடும் என்பதால் பாஸ்கரை விட்டு விலகினார் மஹாலக்ஷ்மி.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பில் வெளியான படங்களில் மஹாலக்ஷ்மி நடித்த போது ரவீந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து அது காதலாக உருவெடுத்துள்ளது. கோடீஸ்வரர் குடும்பத்தை சேர்ந்த ரவீந்திரன் சினிமா மோகத்தில் தயாரிப்பாளராக உருவெடுத்தது அவருடைய குடுப்பதிற்கு விருப்பம் இல்லை. இருந்தும் அவருடைய விருப்பத்திற்கு படம் தயாரித்து வருகின்றார் ரவீந்திரன்.

ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்ற தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் வி.ஜே.மகாலட்சுமி இருவரின் திருமணம் திருப்பதியில் நடந்து முடிந்தது. இதற்கு முன்பு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு ரவீந்திரன்- மகாலட்சுமி திருமணம் அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் பொது மக்கள் மத்தியில் ரவீந்திரன்- மகாலட்சுமி திருமணம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இதற்கு முக்கிய காரணம் ரவீந்திரனின் உடல் பருமம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் மகாலட்சுமி பேசுகையில் திருமணம் முடிந்த உடனே ரவீந்திரனுக்கு ஒரு வாரிசு வேண்டும், அதனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்க கூடாது என கண்டிஷன் போட்டு அதற்கு ரவீந்திரன் ஓகே சொன்ன பின்பு தான் திருமணம் செய்ய சம்மதித்தேன் என்றார் மஹாலக்ஷ்மி.

மஹாலக்ஷ்மியின் இந்த பேச்சுக்கு குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி ஒரு குழந்தை பெற்று விட்டால், மொத்த சொத்தும் ரவீந்திரன் – மகாலட்சுமி தம்பதியினரின் வாரிசுக்கு வந்துவிடும். ஆகையால் ரவீந்திரன் மொத்த சொத்தையும் எதிர்காலத்தில் ஆட்டைய போடுவதற்கு தான், மஹாலக்ஷ்மி உடனே குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடல் பருமன் அதிகம் உள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன் பெரும் கோடீஸ்வரர் என்பதற்காக தான் மகாலட்சுமி அவருடைய உடல் பருமனை கூட பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டார் என்கின்ற பரவலான விமர்சனம் இருந்துள்ள நிலையில், ரவீந்திரன் வாரிசு மூலமாக தான் அவருடைய சொத்தை நாம் அனுபவிக்க முடியும் என்பது மகாலட்சுமிக்கு தெரியாமல் இருக்காது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரும் தங்கள் தொழில்ரீதியிலான அர்ப்பணிப்புகளுக்காக வெளிச்சத்தில் உள்ளனர். ரவீந்தருக்கு ஃபேட் மேன் ஃபேக்ட்ஸ் என்ற சேனல் உள்ளது, அதில் அவர் பாடல்கள், கதைகள் மற்றும் பிற நகைச்சுவை வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறார். இந்த சேனலுக்கு தற்போது 1.23 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.

ரவீந்தர் சந்திரசேகரன், ரவீந்தர் சந்திரசேகரன் படங்கள், ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பாளர், ரவீந்தர் சந்திரசேகரன் ரசிகர்கள், ரவீந்தர் சந்திரசேகரன் திருமணம், கொலையாளி – தி ரெசைலண்ட், மகாலட்சுமி, மகாலட்சுமி நடிப்பு

- Advertisement -

சமீபத்திய கதைகள்