28.9 C
Chennai
Monday, March 20, 2023
Homeசினிமாபொன்னியின் செல்வன் கண்டிப்பா எடுபடாது !!மணிரத்தினம் எடுத்த அதிர்ச்சி முடிவால் பீதியில் தயாரிப்பாளர்..!

பொன்னியின் செல்வன் கண்டிப்பா எடுபடாது !!மணிரத்தினம் எடுத்த அதிர்ச்சி முடிவால் பீதியில் தயாரிப்பாளர்..!

Date:

தொடர்புடைய கதைகள்

சூர்யா ரூ.70 கோடிக்கு புதிய சொகுசு வீட்டை வாங்கிய...

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர்ஸ்டார்களில் ஒருவர், அவர் தனது நடிப்புத்...

அந்த அளவுக்கு சொல்லியும் பிரம்மாண்ட இயக்குனருக்கு நோ சொல்லி...

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

‘சொர்கவாசல்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் இணைந்த செல்வராகவன்!

ஆர்ஜே பாலாஜி கடைசியாக 'ரன் பேபி ரன்' திரைப்படத்தில் நடித்தார், இது...

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை பெரும் பரபரப்பு !...

பழம்பெரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது...

மியூசிக் அகாடமி பாம்பே ஜெயஸ்ரீக்கு ‘சங்கீத கலாநிதி’ விருதை...

இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி மற்றும் பிற விருதுகளை மியூசிக் அகாடமி...

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் மணிரத்னம் முடித்துள்ளார். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் PS-1 (பொன்னியின் செல்வன் பகுதி-1) இலிருந்து ராட்சச மாமனியின் பாடல் வீடியோ தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் விநாயகம் ஆகியோர் பாடியுள்ளனர். கபிலனின் வரிகள் கொண்ட இந்த பாடலில் கார்த்தி வந்தியத்தேவனாகவும், சோபிதா துலிபாலா வானதியாகவும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் பொன்னியின் செல்வன். பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கின்றது இந்த படம்.கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், பாகுபலியை மிஞ்சும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது என விளம்பரம் செய்யப்பட்டாலும், இந்திய அளவில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

அதனால் இந்த படத்திற்கு முழுக்க முழுக்க அனைத்து மொழிகளிலும் கொண்டு சேர்க்கும் வகையில் பிரமோஷனில் கவனம் செலுத்தி வருகிறார் மணிரத்தினம். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து அதிக வசூலை அள்ளி குவித்தது. அந்த வகையில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியே வர இருக்கும் நானே வருவேன் படத்திற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் வெளியாகும் முந்தைய நாள் செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் படத்தை வெளியிட அந்த படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்திருந்தார், இது பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது. அதிக செலவில் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிட்டால்தான் அதிக வசூலை வாரி அள்ளிக் குவிக்கும்.

பொன்னியின் செல்வன் வெளியாகும் அதே நேரத்தில் நானே வருவேன் திரைப்படமும் ரிலீஸ் ஆனால் சுமார் 40 சதவீதம் திரையரங்குகளை நானே வருவேன் திரைப்படம் ஆக்கிரமித்து விடும். இதனால் பொன்னியின் செல்வன் வசூல் வெகுவாக குறையும் என்கின்ற அச்சம் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு இருந்தது இந்த நிலையில், பொன்னியின் செல்வன் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிக்கு வழங்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் விளம்பர போஸ்டர்களில் ரெட் ஜெயன்ட் லோகோவும் இடம்பெற்றது, இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் என்ட்ரி கொடுத்ததின் காரணமாக பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டி போடுவதில் இருந்து பின்வாங்கிய நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் தாணு, நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட்க்கு கொடுத்ததில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு உடன்பாடு இல்லை. இதனால் அவர் அவரின் அழுத்தத்தின் காரணமாக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ரெட் ஜெயன்ட் வெளியேற்றப்பட்டு நேரடியாக மணிரத்தினம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் உதயநிதி எண்ட்ரி கொடுத்ததால் சற்று பின்வாங்கி இருந்த நானே ஒருவன் படத்தின் தயாரிப்பாளர் தாணு. தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதால், பொன்னின் செல்வன் வெளியாகும் அதே நேரத்தில் நானே வருவேன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் தானு சுமார், 60 சதவிகிதம் திரையரங்குகளில் பொன்னின் செல்வன் வெளியிட்டால் கூட, 40 சதவீதம் திரையரங்குகளில் நானே ஒருவன் திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் பெருமளவில் பாதிக்கும், அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறினால், அதே நேரத்தில் நானே வருவேன் படம் திருச்சிற்றம்பலம் போன்று ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டால், பொன்னியின் செல்வன் ஓடும் திரையரங்குகள் குறைய தொடங்கும், மேலும் நானே ஒருவன் வருவேன் ஓடும் திரையரங்கு அதிகரிக்கும்.

இதனால் மிகப்பெரிய அச்சத்திலும் கலக்கத்திலும் இருக்கிறார் மணிரத்தினம் மற்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன். அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினை தக்க வைத்துக் கொள்ளாமல் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேற்றியது மணிரத்தினம் செய்த தவறு என்கிறது சினிமா வட்டாரங்கள்.

பிஎஸ்-1 இன் ஆல்பம் கடந்த வாரம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட காவியத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்திய கதைகள்