Sunday, April 14, 2024 6:07 pm

அஜித் விஷயத்தில் தளபதி விஜய் எடுத்த அதிர்ச்சி முடிவு !! அஜித்தை பார்த்து பயமா ?!! வைரலாகும் தகவல் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் எச் வினோத்துடன் அஜித் நடிக்கும் மூன்றாவது படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் படத்தின் முக்கிய படப்பிடிப்பு அட்டவணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடக்கும் என்றும், அந்த ஷெட்யூலின் போது சில முக்கியப் பகுதிகளை படமாக்க திட்டமிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் சில நிதி காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும், தற்போது, படத்தின் அடுத்த ஷெட்யூல் பாங்காக்கில் நடைபெறும் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. மேலும், 3 வார கால அட்டவணையில் சில பைக் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அஜீத், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் மற்றும் படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் ஷெட்யூலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இயக்குனர் எச் வினோத் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்

இந்நிலையில் அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களில் அதிக வசூலை பெற்றது அஜித் நடித்த வீரம் படம் என்று அஜித் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதே நேரத்தில் ஜில்லா தான் அதிக வசூலை பெற்றது என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

ஆனால் இரண்டு படமே நல்ல வசூலை பெற்றது என்று திரையரங்கு உரிமையாளர் தரப்பிலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இந்த இரண்டு படங்களும் தனித்தனியாக வந்திருந்தால் இரண்டு படமும் இதை விட அதிக வசூலை பெற்று, அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கும் என்கின்ற ஒரு கருத்தும் நிலவியது.

இந்த இந்த சம்பவத்திற்கு பின்பு அஜித் – விஜய் நடிப்பில் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டால், இரண்டு தரப்பிற்கும் வசூல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்காக இவர்கள் நடிப்பில் வெளியான படங்களை ஒரே தேதியில் ரிலீஸ் செய்வது கிடையாது. இந்த நிலையில் வருகின்ற தீபாவளி அன்று விஜய் நடிக்கும் வாரிசு படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே தினத்தன்று எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்க படமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்பும் தாமதமானது, இதனால் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அஜித் நடிக்க படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்று அப்படத்தின் பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முதலில் விஜய் நடிக்கும் வாரிசு படம் தான் பொங்கல் அன்று ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது.

ஆகையால் போட்டிக்காக அஜித் பட குழுவினர்கள் விஜய் படம் ரிலீஸ் ஆகும் பொங்கல் அன்று அவர்களும் ரிலீஸ் செய்கிறார்கள் என்பதை அறிந்த விஜய், உடனே தனது மேனேஜர் ஜெகதீஷை அழைத்து ஒரே தேதியில் இரண்டு படம் ரிலீஸ் ஆவது குறித்து அஜித் நடிக்கும் படத்தின் இயக்குனர் எச் வினோத் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகியோரிடம் இதுகுறித்து நீங்கள் எந்த விதத்திலும் சமரசம் பேசக்கூடாது.

அப்படி பேசினால் நான் பயந்து கொண்டேன் என்கின்ற ஒரு தோற்றம் உருவாகிவிடும், ஆகையால் இதுகுறித்து நீங்கள் எந்த இடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என தன்னுடைய மேனேஜர் ஜெகதீசனை அழைத்து விஜய் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் அன்று அஜித் – விஜய் இருவரின் படமும் ஒரே தேதியில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்