Thursday, April 25, 2024 7:16 pm

பாலாற்றில் நீராடச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

செங்கல்பட்டு பாலாற்றில் நீராடச் சென்ற 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் ஜி சஞ்சய் (16) மற்றும் எஸ் சஞ்சய் (17) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் பாலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.

சிறுவர்கள் நண்பர்களுடன் சனிக்கிழமை மாலை பாலாற்றில் நீராடச் சென்றனர். பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால், சிறுவர்கள் கரையில் நின்று குளித்தனர்.

இருவருக்குமே நீச்சல் தெரியாதது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சிறிது நேரத்தில், சிறுவர்கள் காணாமல் போனதை அடுத்து, நண்பர்கள் இருவரையும் தேடினர்.

பலனளிக்காத தேடுதலுக்குப் பிறகு, அவர்கள் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு வந்தனர்.

சனிக்கிழமை இருட்டியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, சடலங்களை மீட்புப் படையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்