தமிழ்த் திரையுலகம் ஆக்ஷன், நகைச்சுவை, காதல் மற்றும் பிற முக்கியமான உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக அறியப்படுகிறது. மற்ற தொழில்களைப் போலவே, கோலிவுட்டிலும் நடிகர்கள் உள்ளனர், அவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தங்கள் ஸ்வாக், நடிப்பு மற்றும் கவர்ச்சியான வசீகரத்தால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அனுபவிக்கிறார்கள். ரஜினிகாந்த், ஜோசப் விஜய் சந்திரசேகர், அஜித்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அந்த வகையில் 100 கோடி வரை வசூல் சாதனை செய்த தமிழின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
அஜித்: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம், வலிமை, நேர் கொண்ட பார்வை, விவேகம் உள்ளிட்ட 5 திரைப்படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும். இதில் விசுவாசம், வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து உலகம் முழுவதும் 200 கோடி வரை வசூலை அள்ளி குவித்த திரைப்படங்கள் ஆகும்
விஜய்: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி, துப்பாக்கி, மெர்சல், பிகில், , உள்ளிட்ட 3திரைப்படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும். இதில் முக்கியமாக பிகில், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களாகும்.
சூர்யா: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2,சிங்கம் 3, 24, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும். இதில் இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் 3 திரைப்படம், 128 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், லிங்கா, கபாலி, காலா, சிவாஜி எந்திரன் 2.0, பேட்ட, அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும். இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் தான் தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக 100 கோடி வரை வசூல் சாதனை படைத்த திரைப்படமாகும்
கமலஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம், தசாவதாரம், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் சாதனை செய்த திரைப்படங்கள் ஆகும் இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ்: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 2,காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும். இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் மட்டும் 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படமாகும்.
விக்ரம்: நடிகர் சியான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படம் 200 கோடி வரை உலக அளவில் வசூல் சாதனை படைத்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சியான் விக்ரமின் நடிப்பு, அவரது தோற்றம் பலராலும் பாராட்டப்பட்டது.
தனுஷ்: நடிகர் தனுஷ் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்த திரைப்படமாகும். இதுவே தனுஷின் முதல் 100 கோடி வசூல் படைத்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படமும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது
கார்த்தி: நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் முப்பத்தி மூன்று கோடியில் எடுக்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் மூன்று மடங்கிற்கு மேல் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து தளபதி 66 படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தளபதி விஜய் தொடங்கினார். மறுபுறம், அஜித் மற்றும் ரஜினிகாந்த் எச்.வினோத்துடன் ஏகே 61 மற்றும் நெல்சனுடன் தலைவர் 169 ஆகியவற்றில் பிஸியாக உள்ளனர். இந்த படங்களின் உள்ளடக்கம் இந்த நட்சத்திரங்களின் நட்சத்திரத்தை நியாயப்படுத்துகிறது என்று நம்புகிறோம்.