முருங்கக்காய் சிப்ஸ் போன்ற திட்டங்களுக்கு பெயர் பெற்ற லிப்ரா புரொடக்ஷன்ஸின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், யாமிருக்க பயமேன், அரசி, செல்லமாய், வாணி ராணி மற்றும் பிள்ளை நிலா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான நடிகர் மகாலட்சுமியை மணந்தார்.
திருப்பதியில் இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ நடைபெற்றது. மகாலக்ஷ்மிக்கும் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம். மகாலக்ஷ்மிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இவ்வாறு இருக்கையில் இவர்கள் இருவரும் ஹனிமூன் செல்லாமல் ஏன் அடுத்தடுத்து பேட்டிகள் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.அதற்கு எல்லாம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றார் ரவீந்தர்.
இந்நிலையில் தற்போது தனது சோசியல் மீடியாவில் ஒரு ஜெட் விமானத்திற்கு பக்கத்தில் புதுத் தாலியுடன் மகாலக்ஷ்மி மற்றும் ரவீந்தர் உள்ள மாதிரி புகைப்படம் இட்டு ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் கூறியதாவது….
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் பெலிஸ் ஹனிமூன் தீவுக்கு தனியார் ஜெட்டில் பயணம்..தயவு செய்து அந்த மாதிரி போஸ்ட் போடாதீங்க…நான் திருச்சி டால்மியாபுரம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்கிறேன்.என சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.இந்த விடயம் ரசிகர்கள் பலரும் பல கெமண்களை போட மகாலக்ஷ்மியும் அதற்கு ரிப்ளே போட்டுள்ளார்.
வாணி ராணி, ஆபிஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை மகாலட்சுமி. திருமண புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி.. உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு.” படங்களில், ரவீந்திரன் ஒரு பாரம்பரிய முண்டு தோற்றத்தில் காணப்படுகிறார், அதேசமயம் மகாலட்சுமி அழகான தென்னிந்திய மணமகள் உடையைத் தேர்ந்தெடுத்தார்.