அரசி, செல்லமாய், வாணி ராணி, அன்பே வா போன்ற தொலைக்காட்சி சோப்புகளுக்கு பெயர் பெற்ற தமிழ் சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முருங்கைக்காய் சிப்ஸ், மகளிர் கல்லூரியம் போன்ற படங்களைத் தயாரித்துள்ள ரவீந்தர், சமூக வலைதளங்களில் படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஒன்றரை வருடமாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திடீரென திருப்பதியில் மகாலட்சுமி – ரவீந்திரன் காதல் ஜோடியின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்த இந்த ஜோடி வெளியில் தெரியாமல் ரகசியமாகவே காதலித்து வந்துள்ளனர்.
இதனால் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்த போது பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா துறையினருக்கும் திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு இவர்களின் காதலை ரகசியமாக வைத்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தகொண்ட நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து இவர்களின் நடவடிக்கைகள்.
மேலும் தாய்லாந்து ஹனிமூன், படப்பிடிப்பில் கலந்து கொண்டது போன்ற புகைப்படங்கள் மூலம் பெரும்பாலான மீடியாக்களை தங்கள் வசப்படுத்தி கொண்டனர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் புதுமண தம்பதியினர். ஆனால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி- ரவீந்திரன் தம்பதியினர் இதற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியை ஓவர் டெக் செய்து விட்டு ஒட்டுமொத்த மீடியாக்களையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர்.
அந்த அளவுக்கு எந்த சேனல் பக்கம் திரும்பினாலும், ரவீந்திரன்- மகாலட்சுமி புதுமண தம்பதியினரின் குதூகல பேட்டி தான் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. மேலும் இவர்களின் பேட்டிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் மீடியாக்களும் போட்டி போட்டு ரவீந்திரன் – மஹாலக்ஷ்மி தாம்பதியினரை பேட்டி எடுத்து ஒளிபரப்பு செய்கின்றனர்.
சமூக வலைதளங்களில் ரவீந்திரன் உடலை கேலி செய்யும் விதத்தில் மகாலட்சுமி மீது ரவீந்திரன் படுத்தால் என்ன ஆவது என கிண்டலாக பதிவு செய்வதற்கு, பதிலளித்துள்ள ரவீந்திரன், என் மீது மகாலட்சுமி படுத்தால் ஒரு வாட்டர் பலூன் மீது படுத்தது போன்று மகாலட்சுமிக்கு சுகமாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படி இருவரும் தங்களின் சுவாரஸ்யமான காதல் மற்றும் திருமணத்திற்கு பின்பு அவர்களின் எதிர்கால நடவடிக்கை என்று அனைத்தையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பு ரவீந்திரனிடம் ஒரு கண்டிஷன் போட்டு திருமணம் செய்து கொண்டதாக வெளிப்படையாக தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். எனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்ட பின்பு ரவீந்திரனுக்கு எனக்கும் ஒரு குழந்தை தேவை என்பதை, நான் ரவீந்திரனிடம் திருமணத்திற்கு முன்பே கண்டிஷன் போட்டு விட்டேன்.
இந்த கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டால் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்தேன். காரணம் இப்பொழுது இருக்கும் என்னுடைய குழந்தைக்கும் அடுத்து ஒரு குட்டி பாப்பா தேவை. அதேபோன்று ரவீந்திரனுக்கும் ஒரு வாரிசு தேவை என்பதால் இந்த கண்டிஷனை நான் போட்டேன். அதற்கு ரவீந்திரன் ஒப்புக்கொண்ட பின்பு தான், நான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என்று மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மகாலட்சுமியும் ரவீந்தரும் சமீபத்தில் வித்யும் வரை காற்று என்ற படத்திற்காக இணைந்து நடித்தனர். இவர் ஏற்கனவே அனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2019 இல் பிரிந்தது; அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது