Tuesday, April 16, 2024 1:12 pm

வட சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுள்ளது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோவாட்டர்) மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலையில் பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதால், வடசென்னை பகுதிகளுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது.

மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள 100 எம்எல்டி (தினமும் மில்லியன் லிட்டர்) உப்புநீக்கும் ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இந்த ஆலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி காலை 6 மணி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி காலை 10 மணி வரை தண்ணீர் உற்பத்தி நிறுத்தப்படும் என்று மெட்ரோவாட்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வடசென்னை பகுதிகளான மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், படேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். புழலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாற்று குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், அவசர தேவைகளுக்கு நடமாடும் தண்ணீர் டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் குடிநீர் மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகுதி பொறியாளர்களின் தொடர்பு எண்கள்

8144930901 (திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம்),

8144930902 (மணலி),

8144930903 (மாதவரம்),

8144930904 (வியாசர்பாடி, படேல் நகர்).

குடியிருப்போர் தலைமை அலுவலகத்தை 044 45674567, 044 28451300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்