Thursday, April 18, 2024 11:11 am

உண்மையிலேயே எனக்கும் மகாலட்சுமிக்கும் 30 வயசு வித்தியாசமா-உண்மையை உடைத்த ரவீந்தர் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வாணி ராணி, ஆபீஸ், செல்லமாய், உதிரிப்பூக்கள், ஒரு கை ஓசை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வி.ஜே.மகாலட்சுமி, காதல் என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களைத் தயாரித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை மணந்தார். அவரது லிப்ரா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ஒரு சிலருடன் சிப்ஸ்.

நடிகை மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் 20 வயது வித்தியாசம் என்றெல்லாம் ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்று அவர்களே கூறியுள்ளார்கள்.இவர்கள் இருவரையும் திடீரென திருமண கோலத்தில் பார்த்ததும், அனைவரும் ஷாக்காகினர். ஒருவேளை ஏதேனும் படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.

இதன் பின்னர் இருவருமே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பின்னர் தான் இது உண்மையிலேயே நடந்த திருமணம் என தெரியவந்தது.

மேலும் இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் வந்தன. அதன்படி நடிகை மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் 20 வயது வித்தியாசம் என்றெல்லாம் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் ஜோடியாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். அதில், அவர்கள் கூறுகையில், தங்களது திருமணம் காதல் திருமணம் தான் என்றும், இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் தெரிவித்தனர். அத்தோடு வயது குறித்து பரவிய சர்ச்சைக்கும் விளக்கம் அளித்துள்ளார் ரவீந்தர்.

எனக்கு 52 வயது ஆகிவிட்டதாகவும், நான் ஏதோ மகாலட்சுமியை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். உண்மையிலேயே எனக்கு 38 வயது தான் ஆகிறது. எங்கள் இருவருக்கும் அவ்வளவு வயது வித்தியாசமெல்லாம் இல்லை எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரவீந்தர்.

இந்நிலையில் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரவிந்தர்,எங்கள் இருவருக்கும் இடையே இருவது வயது வித்தியாசம் என்று யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை. எனக்கு 38 வயது தான் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் இரண்டு வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரவீந்தர் தயாரிப்பில் விதார்த் மற்றும் விக்ராந்த் நடிக்கும் ‘விதியும் வரை காற்று’ படத்திலும் மகாலட்சுமி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்