அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படம் தணிக்கை குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக, படம் 3 மணி நேரம், 3 நிமிடங்கள் மற்றும் 3 வினாடிகள் நீளமானது, இது சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வீடியோ பைட்டில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் முக்கிய பங்கினை வகித்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். சேது, பிதாமகன், ஐ, அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் விக்ரம் நடிப்பின் மீது எவ்வளவு அதிக ஈடுபாடும் அன்பும் வைத்திருக்கிறார் என்று தெரியும்.
அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது. இந்நிலையில் அவர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் இன்று வெளியாகியுள்ளது.
படம் வெளியாகி படுமோசமான விமர்சனங்களையும் ரசிகர்களின் கருத்துக்களையும் பெற்று வருகிறது. மூன்று வருடங்களுக்கு பிறகு சியான் விக்ரமின் படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இரண்டாம் பாதியில் சொதப்பியுள்ளது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் படம் கடும் விமர்சனங்களை தாண்டி எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது தயாரிப்பில் இருக்கும் விக்ரமின் அடுத்த படத்தை இயக்கி வரும் பா.ரஞ்சித் இயக்கிய நத்தத்திரம் நகர்கிறது திரைப்படம் நிறைவடைந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் கோப்ரா வெளியாகியது