Wednesday, May 31, 2023 3:27 am

அடப்பாவிங்களா அட்டர் காப்பி அடித்து மாட்டிக்கொண்ட விக்ரமின் கோப்ரா !!நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சீயான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31, 2022 அன்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்று வருகிறது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் மிக நீளமாக இருப்பதாக உணர்ந்ததால், படத்தை 20 நிமிடங்கள் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். KGF’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் இர்பான் பதான் ஆகியோரும் நடித்த படத்தின் டிரிம் செய்யப்பட்ட பதிப்பு இன்றைய மாலை காட்சியில் இருந்து திரையரங்குகளில் திரையிடப்படுகிறது

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் கோப்ரா.மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலிஸாகிய இப்படம் கதை ஒன்றிமில்லை என்று கூறி படுமொசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.

முதல் பாதி ஓரளவிகு கவர்ந்ததாகவும் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க சொதப்பியதாகவும் படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் கோப்ரா படத்தின் ஒரு காட்சியை ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடித்துள்ளதாக ஒரு வீடியோ இணையத்தல வைரலாகி வருகிறது.

அப்படியே அந்த சீனை எடுத்து வெளியிட்டதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ரசிகர்கள், என்னங்கடா அப்படியே எடுத்து வச்சிருக்கீங்க என்று கமெண்ட் செய்துள்ளனர். கொடுத்த காசுக்கு இர்பானை போலிங்காவது போட சொல்லியிருக்கலாம் என்றும் இந்தக் காட்சி மிகவும் கடுப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

காப்பியே அடித்திருந்தாலும் காட்சியை நன்றாக எடுத்திருக்கலாம், காது ஜவ்வு கிழிந்தது தான் மிச்சம் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் பாசிட்டிவ் கமெண்ட்டும் வந்துள்ளது. காட்சியில் இன்ஸ்பயர் ஆகிய இந்தக் காட்சியை படத்தில் சேர்த்திருக்கலாம், அதில் என்ன தவறு என்றும் ஒரு ரசிகர்கள் கேட்டிக்கிறார்.

லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கோப்ரா படத்தில் விக்ரம் 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார், இதில் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்