ஜூலை 11ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டு அதிமுக தலைமை அலுவலகம் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக கைது செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் 70 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ் குமார் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஜாமீன் மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு குற்றவாளியும் அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ஆதரவாக தலா ரூ.20,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதாகவும் கூடுதல் அரசு வழக்கறிஞர் இ ராஜ் திலக் வாதிட்டார். மேலும் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க விரும்பினார்.
சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிபிசிஐடியின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி வானகரத்தில் எடப்பாடி கே.பழனிசாமி அணியினர் கூட்டம் நடத்தியபோது, அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. எனவே இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் பலரை கைது செய்தனர்.