Tuesday, April 23, 2024 11:50 am

அதள பாதளத்திற்கு சென்ற விக்ரம் !! ‘கோப்ரா’ இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?..ரசிகர்கள் வேதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘கோப்ரா’ தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் விடுமுறை வெளியீடு ஐந்து நாட்கள் வார இறுதியில் படத்தை இயக்குகிறது. ஆரம்பகால நேர்மறை விமர்சனங்கள் படத்தின் முன்பதிவுகளுக்கு கூடுதல் சக்தியை சேர்க்கலாம், மேலும் இந்த திரில்லர் நாடகம் விக்ரமின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது .

இந்நிலையில் டீமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் கோப்ரா.
இப்படம் கடந்த 2 வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து அதிக பொருட்செலவில் உருவானது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி ரவி, மியா ஜார்ஜ், மீனாக்‌ஷி கோவிந்தராஜ் என 4 நடிகைகள் நடித்துள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புகளிடையே இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 2 படங்களும் சிறப்பாக இருந்ததாலும், விக்ரம் பல கெட்டப்பில் நடித்திருப்பதாலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்றனர். ஆனால், அவர்களை இப்படம் திருப்திபடுத்தவில்லை என்பது வெளியாகி வரும் விமர்சன வீடியோக்களை பார்த்தாலே தெரிகிறது.

விக்ரமின் நடிப்பு மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் இசையை தவிர படத்தில் மற்ற அனைத்துமே சரியில்லை என ரசிகர்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். விக்ரமை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை எனவும், படத்தின் கதை மற்றும் திரைக்கதை பலவீனமாக இருப்பதாகவும், படத்தின் 3 மணி நேர நீளம் பொறுமையை சோதிப்பதாகவும், தியேட்டரில் பலரும் தூங்கிவிட்டதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, விக்ரம் ரசிகர்கர்கள் பலருக்கு இப்படம் பிடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, படத்தில் கதை இல்லை, சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை, காதல் காட்சிகளை வெட்டியிருக்கலாம், படத்தில் கதாநாயகிகளுக்கு வேலையே இல்லை, முதல் பாதி பொறுமை மிகவும் சோதிக்கிறது, காமெடி இல்லை என பல கருத்துக்களை தியேட்டரிலிருந்து வெளியே வருபவர்கள் கூறி வருகின்றனர்.ஆனாலும் எபோவ் ஆவரேஜ், விக்ரமுக்காக ஒருமுறை பார்க்கலாம் என கூறி செல்கின்றனர்.

சியான் விக்ரம், இப்படத்திற்காக பத்து வித்தியாசமான கெட்அப்களில் ரசிகர்களை மீண்டும் திகைக்க வைத்தார். ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, மீனாட்சி, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ மற்றும் ‘கோப்ரா’ படத்தின் ஒவ்வொரு நட்சத்திரமும் இப்படத்தில் தங்கள் அசாதாரணமான பாத்திரங்களால் பார்வையாளர்களின் இதயங்களில் உயர்ந்து நின்றார்கள். இயக்குனர் அஜய் கணன்முத்து ஹாட்ரிக் வெற்றியை அடித்துள்ளார், ஆனால் இந்த முறை அவரது கடந்த இரண்டு படங்களை விட அட்டகாசம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தை ஒரு எட்ஜ் ஆஃப் தி சீட் த்ரில்லராக மாற்றியுள்ளது, மேலும் இது இசையமைப்பாளரின் இசையின் கலவையாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்