Wednesday, May 31, 2023 1:34 am

இதுவரை யாரும் எதிர்ப்பார்க்காத அஜித்தை Ak62 படத்தில் காட்டும் விக்னேஷ் சிவன் !! மாஸ் அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

அஜித் குமார் தனது திரையுலக வாழ்க்கையையும், பைக்கிங் மற்றும் ரைபிள் ஷூட்டிங் மீதான ஆர்வத்தையும் வியக்கத்தக்க வகையில் கையாளுகிறார். அவர் தற்போது தனது வரவிருக்கும் திரைப்படமான ‘AK 61’ இன் இறுதி நீண்ட அட்டவணைக்கு தயாராகி வருகிறார், இது செப்டம்பர் இறுதியில் முடிவடையும். எச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார், இதில் சஞ்சய் தத், மஞ்சு வாரியர் மற்றும் பலர் முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளனர்.

நடிகர் அஜித்குமார், அடுத்தடுத்த சிறப்பான படங்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கிய அஜித், தன்னுடைய ரசிகர்களை மட்டுமே அடித்தளமாக கொண்டு தன்னுடைய கேரியரை பலப்படுத்தியவர்.

தற்போது தன்னுடைய வயதிற்கு ஏற்றாற்போன்ற படங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு காட்டி வருகிறார் அஜித். ஹெச் வினோத் -போனிக்கபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து தற்போது ஏகே61 படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாகப்பட்டினத்திலும் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து விரைவில் படக்குழு அப்டேட் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சூட்டிங் துவங்கி நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் டைட்டிலும் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்படுவதற்கு முன்னதாகவே தீபாவளிக்கு படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இந்தப் படம் டிசம்பரில் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் வாரிசு படமும் பொங்கல் ரிலீசுக்கு திட்டமிட்டுள்ள நிலையில், வரும் பொங்கல் பண்டிகை இருதரப்பு ரசிகர்களுக்கும் சூப்பர் டூப்பர் பொங்கலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இதனிடையே அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ள ஏகே62 படத்தின் வேலைகளும் விரைவுப் படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் ஜனவரி 2023ல் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது விக்னேஷ் சிவன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தானா சேர்ந்தக் கூட்டம், நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்துள்ள விக்னேஷ் சிவன், பெரிய அளவிலான மாஸ் ஹீரோவான அஜித்தை திரையில் எப்படி கொண்டு வருவார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்தனர். இருப்பினும் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்தார், அதே நேரத்தில் அஜித் தபுவுடன் காதல் செய்தார். இந்த இரண்டு கவர்ந்திழுக்கும் நட்சத்திரங்களை மீண்டும் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ள ரசிகர்கள் .

- Advertisement -

சமீபத்திய கதைகள்