Wednesday, June 7, 2023 6:21 pm

இப்ப வரைக்கும் அதை கூறியே என்ன ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க !! கதறிய வாணி போஜன்

spot_img

தொடர்புடைய கதைகள்

சித்தார்த்தின் டக்கர் படத்திலிருந்து வெளியான ரொமான்டிக் பாடலான ‘நீரா’ பாடல் இதோ !

நடிகர் சித்தார்த்தின் அடுத்த பெரிய படம் டக்கார், ஜூன் 9 ஆம்...

‘லால் சலாம்’ படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட் இதோ !

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக...

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ'...

காதல் கொண்டேன் இரண்டாவது ஹீரோ ஆதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் ஆதியாக நடித்ததன்...
- Advertisement -

‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப் சீரிஸ்தான் வாணி போஜனின் சமீபத்திய வெளியீடு. அருண் விஜய்யுடன் இணைந்து நடித்த இந்தத் தொடர், ஆன்லைன் திருட்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகளை மையமாகக் கொண்டது. வலைத் தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு நடிகை சமீபத்திய நேர்காணலில், திட்டங்கள் மற்றும் அதன் கதையின் அடிப்படையில் சமீபத்தில் சலுகைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் தான் நன்றாகவும் கச்சிதமாகவும் பொருந்துவதாக உணர்ந்த பாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்ததாக அவர் தெரிவித்தார்.

சன் டிவியில் தெய்வத்திருமகள் தொடரின் மூலம் மக்கள் பிரபலமானவர் வாணி போஜன். அப்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்க பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் வாணி போஜன் நடித்திருந்தார். அப்போது பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது சினிமாவில் வருவதற்காக பெற்ற அவமதிப்பு மற்றும் அவமானங்களை கூறி இருந்தார்.

அப்போது சின்னத்திரையில் இருந்து வந்ததால் பல நடிகர்கள் தன்னை ரிஜெக்ட் செய்ததாக சொல்லியிருந்தார். மேலும் நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அந்த நடிகர்களின் வாய்ப்பை நான் ரிஜெக்ட் செய்ததாக வாணி போஜன் அந்த பேட்டியில் கூறுகிறார்.

இந்நிலையில் வாணி போஜன் பற்றி சில கிசுகிசுக்கள் வந்துள்ளதா என பேட்டியாளர் கேட்டிருந்தார். அதாவது தமிழ் ராக்கர்ஸ் ஆடியோ லான்ச் அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. அதாவது எல்லா பெண்களுக்கும் நடப்பது போல மாதவிடாய் காலகட்டத்தில் முகம், கை, கால் போன்றவை வீக்கம் அடைந்து இருந்தது.

ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அந்தச் சமயத்தில் பத்திரிக்கையாளர்கள் வாணி போஜன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என எழுதி இருந்தனர். ஒரு சாதாரண விஷயத்தை கூட இவ்வாறு சர்ச்சையாக பத்திரிக்கையாளர்கள் எழுதியிருந்தனர்.

எனக்கு அப்போது வர முடியாத சூழ்நிலையில் இருந்தும் நிகழ்ச்சியை மறுக்க முடியாது என்ற காரணத்தினால் அதில் கலந்து கொண்டேன். ஆனால் நான் பிளாஸ்டிக் சர்ஜனை செய்து கொண்டேன் என்று எழுதியது எனக்கு மனவருத்தமாக இருந்தது என தனது ஆதங்கத்தை அந்த பேட்டியில் வாணி போஜன் கூறியிருந்தார்.

வாணி போஜன் மேலும் பல ஆண்டுகளாக திரைப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான அணுகுமுறை மாறிவிட்டதாக கூறப்படுகிறது. கலைஞர்களுக்கு வயது வரம்புக்குட்பட்ட காரணியாக இல்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். மேலும் நடிகை நயன்தாரா திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் தனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்