Thursday, March 28, 2024 7:00 pm

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜ தந்திரத்தை கையில் எடுத்த அஜித் !! வைரலாகும் தகவல் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமாரின் 61வது படமான ஏகே61 படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எச் வினோத், ஏகே மற்றும் போனி கபூர் காம்போ இந்த பேங்க் ஹீஸ்ட் த்ரில்லருக்கு மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்தனர். தயாரிப்பாளர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒரு நீண்ட அட்டவணையை முடித்தனர். படத்திற்கு ‘வல்லமை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சினிமாவில் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் இளம் இயக்குனர்களிடம் இணைந்து, இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. இவருக்கு ஓர் பழக்கம் உண்டு. அதாவது விளம்பர படங்களில் ரஜினி நடிக்க மாட்டார். தேவைப்படும் இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு செல்ல மாட்டார். மேலும்முத்து, படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் என ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 2 வருட கேப் விட்டு விடுவார்.

அதனால், தங்கள் ஆஸ்தான நாயகரை 1 அல்லது 2 வருடத்திற்கு ஒரு முறை தான் அதிலும் திரையில் மட்டும் தான் பார்க்கமுடியும் என்பதால் அவர் படத்திற்கு மிக பெரிய ஓப்பனிங் இருக்கும். கிட்டத்தட்ட அதே பார்முலாவை நடிகர் அஜித்தும் பின்பற்றி வருகிறார்.

அவர் இயக்கத்திலும் படங்கள் வெளியாக ஓராண்டு அல்லது இரண்டு வருடங்களாவது ஆகிவிடுகிறது. விவேகம் வர கிட்டத்தட்ட 2வருடம் ஆனது. வலிமை வெளியாக கிட்டத்தட்ட 3 வருடம் ஆகிவிட்டது. தற்போது அவரது 61வது திரைப்படம் பற்றியும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

அஜித்தை திரையில் மட்டும் தான் பார்க்கமுடியும். அதுவும், அவர் விளம்பரத்தில் மட்டுமல்ல , பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அதனால் ரஜினியை போலவே அஜித் படத்திற்கும் ஓப்பனிங் நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட இதே பார்முலாவை தளபதி விஜயும் பின்பற்ற தொடங்கியுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

அஜீத் குமாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும், வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய் மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, ‘ஏகே61’ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்