Friday, April 26, 2024 4:22 am

அஜித் 61 படத்திற்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு ! ஒகே சொன்ன வினோத் மிரளும் திரையுலகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் அடுத்து எச் வினோத் இயக்கத்தில் ஒரு திருட்டு திரில்லர் படத்தில் நடிக்கிறார். நடிகர் சமீபத்தில் படப்பிடிப்பின் இறுதி அட்டவணையை மீண்டும் தொடங்கினார். தற்போது, ​​’ஏகே 61′ படத்திற்காக அஜித் அரக்கு பள்ளத்தாக்கில் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இப்படத்திற்காக ரேஸி பைக் ஸ்டண்ட் ஒன்றை படமாக்க இயக்குனர் எச் வினோத் மற்றும் குழுவினர் திட்டமிட்டுள்ளனர், மேலும் படப்பிடிப்பிற்கான இடமாக ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கை பூட்டியுள்ளனர். அஜித் மற்றும் சில நடிகர்கள் பங்கேற்கும் ஒரு அதிரடி காட்சியை அரக்கு பள்ளத்தாக்கில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் குழு பிரபலமான மலைப்பகுதியில் ஒரு வாரம் படமாக்குகிறது.

இந்த படம் பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. அஜித் பிறந்தநாள், ஸ்ரீதேவி பிறந்தநாள் என முக்கிய நாட்களில் அப்டேட் வரும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களைத் தொடர்ந்து புனேயில் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடத்தப்படும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இறுதிக்கட்ட ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் நடப்பதாகவும், இதில் கலந்து கொள்வதற்காக அஜித் புறப்பட்டு சென்றிருப்பதாகவும் மற்றொரு தகவல் வெளியானது.

ஏகே 61 இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக அஜித் விசாகப்பட்டினம் சென்ற போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வைரலாகின. லேட்டஸ்ட் தகவலின் படி, தற்போது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் நடத்தப்பட்டு வரும் ஏகே 61 ஷுட்டிங்கில் அஜித் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பைக் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷுட்டிங் நடக்கும் இடம் முழுவதையும் அடைக்கவும், படக்குழுவில் உள்ள வெகு சிலர் மட்டுமே ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற இந்த பகுதியில் ஒரு வாரம் வரை ஷுட்டிங் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. விஜய்யின் வாரிசு பட ஷுட்டிங் போட்டோ, வீடியோக்கள் லீக் ஆனதால் ஏகே 61 டீம் உஷாராகி விட்டதாக சொல்லப்படுகிறது

ஏகே 61 படமும் உண்மை சம்பவங்களில் அடிப்படையிலான படம் என்றே சொல்லப்படுகிறது. இதில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜான் கொக்கன், வீரா, அஜய் போன்றவர்கள் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசைக்கிறார். இவர்கள் அனைவருமே அஜித்துடன் முதல் முறையாக பணியாற்றும் படம் இதுவாகும்.

படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 61 போஸ்டரின் வரவிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் போனி கபூர் எந்த தகவலும் வெளியிடாததால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

ஏகே 61 படத்தை முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவே திட்டமிடப்பட்டது. ஆனால் ஷுட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித்தின் ஏகே 61 படமும், விஜய்யின் வாரிசு படமும் ஒரு சமயத்தில் மோதிக் கொள்ளும் நிலை வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏகே 61 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதே பொங்கலுக்கு தான் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டனர்.

மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜான் கொக்கன், வீரா, அஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் இது அஜித்துடன் அவரது முதல் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்று அறிவிக்கப்பட்ட ‘ஏகே 61’ சில நிஜ வாழ்க்கை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்