Wednesday, April 17, 2024 4:57 am

வயதை பொருட்படுத்தாமல் கல்யாணம் செய்து கொண்ட பிரபலங்கள்… ஐஸ்வர்யா ராயும் இந்த லிஸ்ட்லியா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சினிமா நட்சத்திரங்கள் தன்னுடன் நடித்த சக நடிகை – நடிகர்களுடன் காதல் வலையில் சிக்கி அவரையே திருமணம் செய்து கொள்வார்கள். காதலுக்கு வயசு வரம்பில்லை என்று கூறுவதற்கேற்ப இந்திய பிரபலங்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்வார்கள். அதில் முக்கிய நட்சத்திரங்கள் யார் யார் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை பார்ப்போம்..

நடிகர் தனுஷ் தன்னைவிட 2 வயது மூத்த பெண் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 21 வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றனர்.

மலையாள சினிமாவின் பிரபல நடிகை பூர்ணிமா, இந்திரஜித் என்பவரை 2002ல் திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமா அவரை விட ஒரு வயது முத்தவர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு 2 வயது மூத்தவர் நம்ரதா ஷிரோத்கர் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றார்.

கேஜிஎஃப் படத்தின் நாயகன் யஷ் 2 வயது மூத்த ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது மூத்த பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாயிஷா தன்னை விட 17 வயது மூத்த நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ஷில்பா செட்டி ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 3 மாதம் இளையவரான அவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவை விட 2 வயது இளையவர்.

நடிகர் சைஃப் அலிகான் 12 வயது மூத்த அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 13 வருடங்களுக்கு பின் அவரை விவாகரத்து செய்து பிரிந்து கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 6 வயது மூத்தவரான அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நயன் தாரா தன்னைவிட ஒரு வயது இளையவரான விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்