Saturday, April 13, 2024 7:08 pm

நடிகர் வெற்றி, கருணாகரன் நடித்த ‘ஜீவி 2 ‘ படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜிவி 2, ஆகஸ்ட் 19, வெள்ளிக்கிழமை ஆஹா அன்று நேரடி OTT வெளியீட்டைப் பெற தயாராக உள்ளது. க்ரைம் த்ரில்லர், வெற்றியை அசல் கதாபாத்திரத்தில் இருந்து மையக் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார், விஜே கோபிநாத் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜிவி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜிவி 2, VJ கோபிநாத் அதன் மையக் கதாபாத்திரமான சரவணனின் புதிய வாழ்க்கையை சித்தரிக்கிறது, வெற்றி நடித்தார். இவர் தனது வீட்டு உரிமையாளரின் மகள் கவிதாவை திருமணம் செய்து கொண்டு ஷேர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இருப்பினும், சரவணன் மீண்டும் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட பிறகு விஷயங்கள் வேறு திருப்பத்தை எடுக்கின்றன, மேலும் அவரது நண்பர் மணி அவரது வாழ்க்கைக்கு திரும்பினார்தற்போது ‘மாநாடு’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் ‘ஜீவி 2’ படத்தைத் தயாரித்துள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய கோபிநாத் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆனால் முதல் பாகத்திற்கு கதை திரைக்கதையை பாபு தமிழ் என்பவர் அமைத்திருந்தார்.

ஜீவி முதல் பாகத்தைப் பார்க்காமல் தவற விட்டவர்களுக்காக இந்த இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே முதல் பாகத்தின் முக்கிய பகுதிகளை திரையிடுகின்றனர் .

எனவே ஜீவி 2 படத்துக்குள் எளிதாக அனைவரும் நுழைந்து விடலாம்.

ஒன்லைன்…ஜீவி முதல் படத்தின் பாகத்தில் கூறப்பட்ட முக்கோண விதி தொடர்பியல் ஆகியவற்றின் தொடர்ச்சி தான் ஜீவி 2.

தன்னுடைய வாழ்வில் இன்று நடக்கும் ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவருக்கு அதுபோலவே நடந்து இருக்கலாம்.

அதுவே தொடர்பியல். எனவே அப்போது நடந்தவைகளை இன்று தனக்கு ஏற்றபடி மாற்றி வடிவமைத்து கொள்ளலாம். இது ஒரு முக்கோண விதியாக உருவம் பெறுகிறது.

கதைக்களம்…நாயகன் வெற்றி, ஹவுஸ் ஓனர் அக்கா ரோகினி. இவரது பார்வையற்ற மகள் அஸ்வினி. இவரின் தாய் மாமன் மைம் கோபி.

மைம் கோபி திருமணமாகாதவர். தன் அக்காவின் குடும்பத்திற்காக வாழ்ந்து வருபவர்.

படத்தின் நாயகன் வெற்றியும் தன் அக்காவுக்காக வாழ்ந்து வருபவர். ஒருவேளை தான் திருமணம் செய்து கொண்டால் இந்த தொடர்பியல் முடிவுக்கு வரும் என நம்புகிறார்.

அதன்படி ரோகினி மகள் அஸ்வினியை திருமணம் செய்து கொள்கிறார். ஆனாலும் விதி இவரை விடாமல் துரத்துகிறது. அதில் இருந்து எப்படி மீண்டார் என்பதே மீதிக்கதை.

இதனிடையில் வெற்றியின் நண்பன் ஒருவர் கொல்லப்படுகிறார். மேலும் அஸ்வினியின் கண் பார்வை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. இது போன்ற சிக்கலில் சிக்கிய வெற்றி என்ன செய்தார் என்பதே கதை.

கேரக்டர்கள்…படத்தின் நாயகன் வெற்றி கதைக்கு ஏற்றார் போல் யோசித்து யோசித்து செயல்படுகிறார்.

ஆனால் படம் முழுவதும் ஒரேடியாக யோசித்துக் கொண்டே இருப்பதால் நமக்கு போர் அடிக்கிறது. முக பாவனைகளில் கொஞ்சம் மாற்றம் செய்து ரொமான்ஸ் செய்தால் ரசிகர்களை கவரலாம்.

முதல் பாகத்தில் அஸ்வினிக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் காதல் ஊடல் என கொஞ்சம் இறங்கி அசத்தியிருக்கிறார். அழகான கண்கள் உதடுகள் என ரசிகர்களை வசீகரிக்கிறார். முதல் இரவு செம.

கருணாகரன் அவ்வப்போது கதையோடு காமெடியை செய்து படத்தை நிறுத்தி இருக்கிறார்.

இவர்களுடன் ரோகிணி மைம் கோபி உள்ளிட்டோர் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.

வெற்றி நண்பனாக வரும் முனாஃப் சின்ன வேடம் என்றாலும் அசத்தியிருக்கிறார். இவரைச் சுற்றியே கதை நகர்வது குறிப்பிடத்தக்கது

டெக்னீஷியன்கள்..டி.பிரவீண்குமாரின் ஒளிப்பதிவு வெகு நேர்த்தி. கே.எல்.பிரவீணின் படத்தொகுப்பும் விறுவிறுப்பாக உள்ளது.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அரிதாகவே இது போன்ற வித்தியாசமான கதைகளை ஒரு சில இயக்குனர்களே கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள இயக்குனர் கோபிநாத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்

மாறுப்பட்ட கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொன்னதற்காகவே வி.ஜே.கோபிநாத்தை பாராட்டலாம்.

*பெண்களுக்கு மட்டும் ஏண்டா எல்லா பிரச்சினையும் வருகிறது.. ஏன்னா அவங்க பெண்கள்..

பெண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் கடந்து தான் போக வேண்டும். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல.”* இது போன்ற வசனங்கள் பெண்களையும் கவரும்.

ஆனால் முதல் பாகத்தில் நமக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த படத்தில் சற்று குறைந்துள்ளது. அதற்கு காரணம் முதல் பாகம் வெளிவரும்போது தொடர்பியல் முக்கோணவிதி என்பது நமக்கு புதிதாக சொல்லப்பட்டது..

ஆனால் இந்த பாகத்தில் பழகிவிட்டது. இன்னும் புதிய திருப்புமுனையோடு (ட்விஸ்ட்) ஜீவி 3 வந்தால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

ஆக.. ஜீவி 2.. தொலையாத தொடர்பியல்

அஸ்வினி சந்திரசேகர் கவிதாவாகவும், கருணாகரன் மணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ரோகினி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜவஹர் நாசர், மைம் கோபி, ரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி 2 படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்