Wednesday, March 27, 2024 11:00 pm

விருமன் படத்தையே பதம் பார்த்த அமலாபால் !! நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கொம்பன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் இணைந்த இரண்டாவது திரைப்படமான விருமன் திரைப்படம் விமர்சனத் ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்காக ஆடம்பரமான விளம்பரங்களின் மூலம் தான் இந்த படம் நன்றாக ஓடியது என கூறப்படுகிறது. என்னதான் கிராமத்து கதையாக இருந்தாலும் கொம்பன் சாயலில் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருந்தாலும் OTT யில் வெளியான கடவர் திரைப்படம் விருமனைவிட அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதனை கொண்டாடும்விதத்தில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் டிஆர்பி ரேட்டிங்கை வெளியிட்டு உள்ளார். அதில் விருமன் படம் இரண்டாவது இடத்திலும் முதலிடத்தில் கடவர் படம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடவர் படம் வந்தது பலருக்கும் தெரியாமல் இருந்தாலும் ottயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விருமன் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் ஆடம்பரமாக விளம்பரம் செய்ததாலேயே இந்தப் படம் வெற்றி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி சர்தார் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமுக வலைதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் ஒரு கார்த்தி காவல் துறை அதிகாரியாகவும் மற்றொரு கார்த்தி வயதான தோற்றத்தில் காணப்பட்டுள்ளார்.

அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான கடவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், முனீஸ் காந்த் ,உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்