நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். நடிகர் ஒரு சிறிய இடைவெளிக்காக ஐரோப்பாவுக்குச் சென்றார், இப்போது அவர் திரும்பிய பிறகு புதிய படப்பிடிப்பு அட்டவணையைத் தொடங்க விசாகப்பட்டினத்திற்குச் சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் . ஆனாலும் அவரது ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் சண்டைபோட்டுக்கொண்டே தான் வருகிறார்கள். விஜய் படம் வெளியானால் அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும் அஜித் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதுமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அனிருத் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியது என்னவென்றால், ” தான் தலைவர் படத்திற்கு பிறகு அதிகமாக திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் என்ற தல படம் தான் என்று பேசியிருப்பார்.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அனிருத்தே அஜித் ரசிகர் தான் என்று பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ஏனென்றால், அனிருத் விஜய்க்காக கத்தி, மாஸ்டர்,பீஸ்ட் ஆகிய 3 படங்களில் தரமான பாடல்களையும், தரமான பின்னணி இசையும் கொடுத்திருப்பார்.
அப்படி விஜய்க்காக தரமான இசையை கொடுத்த அவரே அஜித் ரசிகர் தான் என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அனிருத் அஜித்துக்காக வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்கு இசைமைத்து கொடுத்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள “AK62” படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாவதால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.
புலி 🐅 வேட்டை pic.twitter.com/nbuwdt0Ces
— 🔥 Ajith Kumar🔥Fan (@thala_speaks) August 18, 2022
பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமான இப்படம் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்தின் சில பகுதிகளும் கடந்த மாதம் புனேவில் படமாக்கப்பட்டது. படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார், மேலும் படத்தின் நடிகர்களில் சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், அஜய் மற்றும் கவின் ஆகியோர் உள்ளனர்.