Wednesday, December 6, 2023 12:15 pm

உண்மையிலேயே அஜித்துக்கும் விஜய்க்கும் நடுவுல இப்படி ஒரு போட்டி இருந்துச்சா? கடைசில யார் ஜெயிச்சாங்கன்னு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2011-ம் ஆண்டு ‘மங்காத்தா’ மற்றும் ‘வேலாயுதம்’ படங்களின் படப்பிடிப்பின் போது அஜீத்தும் விஜய்யும் சந்தித்தனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு அது நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் தனது அடுத்த படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

விஜய், அஜித் இருவருமே கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகினர். விஜய்யை வைத்து அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தார். அதேபோல், அஜித் யாருடைய உதவியும் இல்லாமல், வாய்ப்புகள் தேடி தடம் பதிக்கத் தொடங்கினார். இருவருக்கும் ஆரம்பத்தில் பல தோல்விப் படங்கள் அமைந்தாலும், தங்களது திறமையாலே அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர்.

விஜய், அஜித் இருவரும் முன்னணி நடிகர்களாக வருவதற்கு முன்னர், ஒரே படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற தலைப்பில் வெளியான அந்தப் படத்தை ஜானகி செளந்தர் இயக்கியிருந்தார். இருவரும் நண்பர்களாக நடித்திருந்த இந்தப் படம், பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இருவரும் இணைந்து ஒருபடம் கூட நடிக்கவில்லை.

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ படம் சூப்பர் ஹிட் ஆனது. அதில் அஜித் ஆண்டி ஹீரோவாகவும், அர்ஜுன் ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை பார்த்த விஜய், “இந்த கதை தெரிந்திருந்தால், இதில் அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன்” எனக் கூறி ரசிகர்களை சூடேற்றினார். இதனால், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான கதை தன்னிடம் இருப்பதாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருந்தார்.

இருவரது படங்களிலும் விஜய்யும் அஜித்தும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதாகவும் அல்லது சவால் விடுவதாகவும் பஞ்ச் வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், இருவரும் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் ஆதி படமும், அஜித்தின் பரமசிவன் படமும் 2006ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது.

இதற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான் காரணம் என சொல்லப்படுகிறது. அவரே அஜித் படத்துக்குப் போட்டியாக ஆதியை ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குநர் ரமணாவிடம் கூறியதாகவும், அதனால், சொன்னதைவிட மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆதி ஷூட்டிங்கை முடித்ததாகவும் சமீபத்தில் பேசியிருந்தார். ஆனாலும், ஆதி, பரமசிவன் இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமான இப்படம் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்தின் சில பகுதிகளும் கடந்த மாதம் புனேவில் படமாக்கப்பட்டது. படத்தின் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார், மேலும் படத்தின் நடிகர்களில் சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், அஜய் மற்றும் கவின் ஆகியோர் அடங்குவர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்